கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 7, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

ஜாக்சன் ஒன்லைனில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார். அவர் தனது சுய விபரக் கோவையினை பல நிறுவனங்களுக்கு அனுப்புகிறார். ஒரு நாள் காலை வேளையில் அவர் தனது மின்னஞ்சல் கணக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைக் கண்டார்.

அம்மின்னஞசலில் கவர்ச்சிகரமான சம்பளப் பொதியுடன் அந்நிறுவனத்தின் ஒரு பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்போ நேர்முக பரீட்சையோ எதுவுமே இல்லாமல் தான் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை ஜாக்சனுக்கு சந்தேகமாக இருந்தது.

ஜாக்சன் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர், எனவே அவருக்கு வேலை வழங்கிய நிறுவனத்தைப் பற்றி மேலும் தேட எண்ணினார். அவர் நிறுவனத்தின் பெயரையும், தனக்கு வாய்ப்பு கிடை த்துள்ளதாக அறிவித்தல் வழங்கிய அம்மின்னஞ்சல் பற்றியும் கூகுளில் தேடினார், மேலும் இது ஒரு மோசடி என்று கண்டுபிடித்தார், இவர்கள் இதன் மூலம் மக்களுக்கு வேலை வழங்குவதாகவும், பதிவுக் கட்டணம் செலுத்துமாறும் கோரி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
இதுபோன்ற மின்னஞ்சல்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், அத்தகைய அமைப்பு/நிறுவனத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்க்காமல் உங்கள் விபரங்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.