கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

‘பெஸ்ட் ரபர்’ ஏற்றுமதி நிறுவனத்தின் கணக்காளர் ஷானாஸ். வியாபாரத்தில் எழுதப்பட்ட ஆதாரமாக கருதப்படக்கூடிய மின்னஞ்சல் மூலமாக இவர் பொதுவாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்கிறார். கடந்த வருடம் அவர் ‘ ரூபா 7,000,000 பெறுமதியான பாரிய கொள்முதல் கேள்வியைக் கோரிய யுகே டயர் ஹவுஸுடன்’ சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். நடைமுறையைப் பின்பற்றி, அவர் பொருட்களை அனுப்பி விலைப்பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பினார்.


இதற்கிடையில், ‘யுகே டயர் ஹவுஸ்’ ஷனாஸிடமிருந்து பின்வரும் மின்னஞ்சலைப் பெற்று பணத்தை புதிய கணக்கில் வைப்புச் செய்தது.
எங்கள் கணக்கு அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, எங்கள் வங்கி விவரங்களை பின்வருமாறு மாற்றியுள்ளோம் ;


கணக்கின் பெயர்: சின்சியன் சவோய்
எஸ்.எல்.ஐ வங்கி: 1111 2222 3333 4444
கிளை: டியோட்யா

உங்களால் உடனடியாக செலுத்தப் வேண்டிய இறுதி விலைப்பட்டியல் கொடுப்பனவுகளுக்கான விவரங்களை நீங்கள் திருத்திக் கொள்வதற்கு எமது நன்றிகள்.

பணம் ஏன் இன்னமும் மாற்றப்படவில்லை என ஆச்சரியமடைந்த ஷானாஸ் தனது மின்னஞ்சலை அணுகுவதில் ஏதோ தவறு இருப்பதால் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டார். அதன் போதே மின்னஞ்சலில் இடம்பெற்ற மோசடி தொடர்பாடலின் மூலமாக ஹக்கரின் கணக்கில் பணத்தை வைப்புச் செய்ய ‘யுகே டயர் ஹவுஸ்’ இற்கு வழிவகுத்தமையை அவர் உணர்ந்து கொண்டார் .

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கு கிடைத்தால் ,
பணத்தை வைப்புச் செய்வதற்கு முன் உரிய நிறுவனத்தை அழைத்து இருமுறை சரிபார்க்கவும்.