கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 2, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

அயேஷ் பிரபல கல்வி நிறுவனமொன்றில் உயர்  டிப்ளோமா கற்கை நெறியொன்றைப் படித்து வந்தார். உயர் டிப்ளோமாவுக்குப் பிறகு பட்டப்படிப்பு வரை தொடர வேண்டும் என்ற இலக்கு இருந்ததால், அந்நிறுவனம் தனக்கு சிறந்ததொரு பணியிடமொன்றையும் பரிந்துரைக்கும் என்பது அவன் நன்று அறிந்திருந்தான்.

காலம் செல்லச் செல்ல அயெஷ் சில புதிய நண்பர்களுடன் தொடர்பினை உருவாக்கிக்கொண்டான். அவரது வாழ்க்கையானது பரீட்சைகள் மற்றும் ஒப்படைகள் போன்ற பணிகளுடன் நகர்ந்தது  அதனால் அவன் மிகவும் ஓய்வற்ற  நிலையில்  காணப்பட்டான். அயேஷுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், அவர் தனது பேஸ்புக் செய்தியோடை மற்றும் இன்ஸ்டாகிராமினை பார்ப்பது  போன்றவற்றை ஒரு பொழுது போக்காக செய்ய பழகினார்.

ஒரு நாள், அயேஷின் பாடசாலை நண்பர் ஒருவர் அவனிடம், அயேஷ் என்று ஒருவர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும், வழமைக்கு மாறான முறையில் அரட்டை அடித்ததாகவும் கூறினார். அயேஷ் ஆச்சரியப்பட்டான். இது நிச்சயமாகப் போலிக் கணக்கு ஒன்று தான் என நினைத்தான். அயேஷ் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான், பிறகு இதைப் பற்றி அயேஷிடம் கூறிய அவனது நண்பன் ஹிதவதியை தொடர்பு கொள்ளும்படியும் பரிந்துரைத்தான். அயேஷ் ஹிதவதியை அழைத்ததுடன், கணக்கை புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டான்; புகாரளிக்கும் முறையைப் பற்றியும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து, பேஸ்புக் மூலம் குறிப்பிட்ட கணக்கை நீக்கியிருப்பதாக அயேஷ் அறிந்து கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, அயேஷ்யை ஆள்மாறாட்டம் செய்வதற்காக அவரது பெயர், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தி மற்றொரு போலிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தார். இந்த போலிக் கணக்கும் தனது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் தகாத உரையாடல்களை நடத்தியுள்ளது என்பதை அவன் புரிந்து கொண்டான். ஹிதவதியின் முந்தைய அறிவுறுத்தல்களின்படி மீண்டும் அவர் இக் கணக்கை புகாரளித்தார்.

காலப்போக்கில், தனது பெயர் மற்றும் படங்களை பயன்படுத்தி போலிக் கணக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கப்படுவதை அயேஷ் உணர்ந்தான். இந்த போலிக் கணக்குகள் மிகவும் மோசமான பேச்சுக்கள் மற்றும் அவரது நண்பர்களுடன்  பாலியல் உரையாடல்களையும் (செக்ஸ்ட்டிங்)  செய்யப் பயன்படுத்தப்பட்டது.

நண்பர்களிடமிருந்து அவ்வுரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களை அயேஷ் பெற்றதுடன், ​​சிலர் அவருக்கு என்ன நடந்து  இருக்கிறது என்று கூட கேட்டார்கள். இதற்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை. கல்லூரிக்குக் கூட செல்ல முடியாமல் மனரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டான். கல்லூரியில் அவரது நண்பர்கள் அவனைக் கேலி செய்தார்கள் மேலும் அவனது சக தொகுதி மாணவர்களால் அவனோ ஒதுக்கப்பட்டான்.

அயேஷுக்கு இவ்விடயங்கள் அதிக பாரத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்தன, எந்த தீர்வையும் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை, சில சமயங்களில் தனது உயிருக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ள வேண்டும் என்று  கூட உணர்ந்தான்.

ஒரு நாள் மதியம், சில காலத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட போலிக் கணக்கை அகற்ற உதவிய ஹிதவதியை நினைவு கூர்ந்தான். ஹிதவதியை தொடர்பு கொண்டு இப் பிரச்சனைகளிலிருந்து விடுபடத் தான் தற்கொலை செய்து கொள்ளும் மன உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளதாகவும்,  தான் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் கூறினான்.

ஹிதவதி அவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டு, உறுதியாக இருக்கும் படி கூறி, பின்னர் அவர் உளவியல் ஆலோசனைக்காகச் சிறப்பு மனநல ஆதரவு சேவை (1926) அனுப்பப்பட்டார். அதன்பிறகு,செயலி (ஆப்) மூலம் செய்யப்பட்ட ஆரம்ப புகார்களுக்குப் பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஹிதவதி மெட்டாவிற்கு (பேஸ்புக்) நிறுவனத்திற்கு எழுத தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. இதன் விளைவாக, “சுய-தீங்கு” ல் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரைப் போல ஆள்மாறாட்டம் செய்ய உருவாக்கப்பட்ட அனைத்து போலிக் கணக்குகளையும் பேஸ்புக் உடனடியாக நீக்கியது. சில காலங்களுக்குப் பிறகு, ஹிதவதியூடாக வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலால், அயேஷினால் தனது இயல்பு வாழ்க்கையைத் திரும்பப் பெற முடிந்தது. தனது உயிரைக் காப்பாற்றியதற்காக ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  •  உங்கள் Facebook சுயவிவரத்தைப் பூட்ட பரிந்துரைக்கப்படுகிறது, இது பெரும்பாலான உள்ளடக்கங்களை மற்றும் செயற்பாடுகளை ‘நண்பர்களுக்கு மட்டும்’ என்று கட்டுப்படுத்தும் அம்சமாகும். இது பதிவேற்றிய உங்கள் படங்களைப் பதிவிறக்குவது, சேமிப்பது மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும். உங்கள் FB சுயவிவரத்தை எவ்வாறு பூட்டுவது என்பதை அறிந்து கொள்ள https://www.facebook.com/help/196419427651178
  • காட்டப்பட்டுள்ள படிகளின்படி அல்லது ஹிதவதியின் ஆதரவுடன் போலி/ஆள்மாறாட்டம் செய்தல் (உங்களைப்போல் அல்லது வேறு ஒருவராகவோ நடிக்கும்) Facebook கணக்குகளைப் புகாரளிக்கவும் https://www.hithawathi.lk/help-centre/social-media/facebook/fake-accounts-2/
  • இதுபோன்ற நிகழ்வுகளால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டால் 1926 (சிறப்பு மனநல ஆதரவு சேவை) ஐத் தொடர்பு கொள்ளவும்.