கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 20, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனைகளாகும்.

சகிலா நுவரெலியாவில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தாள். அவள் திருமணமாகி தனது வாழக்கையின் முக்கிய கட்டத்தில் குழந்தையை எதிர்பார்க்கும் நிலையில். தனது புதிய கனவுகளோடு மகிழ்ச்சிகரமான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த போதும், இந்த மகிழ்ச்சி நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.

சகிலா, ஒரு நாள் பாடசாலையில் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றமொன்றை அவதானித்தாள். அவர்கள் அவளை மிகவும் அசாதாரணமான முறையில் எதிர்நோக்குவதாக உணர்ந்தாள். பாடசாலை முழுவதும் சில வதந்திகள் பரவிக்கொண்டிருந்த வேளை, ரேணுகா எனும் சக ஆசிரியர் ஒருவர் மூலம் தன்னை பற்றிய ஒரு மோசமான செய்தியை அறிந்து ண்டாள்.

ரேணுகா : உங்களிடம் ஒரு விடயம் சொல்ல வேண்டும். உங்களது நிலைமை காரணமாக இதை சொல்லலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்தேன்

சகிலா : என்ன? நானும் கடந்த சில நாட்களாக சில மாற்றங்களை உணர்கின்றேன்தோடு, நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ரேணுகா : உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவன் தனக்கு நீங்கள் பேஸ்புக்கில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கணிதப் பாட ஆசிரியரிடம் கூறினான். நிலைமை மோசமடையக்கூடும் என்று எண்ணி நான் இதை உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. , இது நீங்களாக இருக்காது என்று கூட நான் அவரிடம் கூறினேன்.

சகிலா : கடவுளே!!! இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மிகவும் பயமாக இருக்கின்றது, இப்போது நான் என்ன செய்வது?

சகிலா உதவியற்று நடுக்கம் கொண்டு அழுதாள். இதனை பார்த்த ரேணுகா அச்சமடைந்தாள். அவள் சகிலாவை அமைதிப்படுத்த முயற்சி செய்ததோடு இது தொடர்பாக உதவி செய்வதாக சகிலாவிற்கு உறுதியளித்தாள்.

சகிலா வீட்டிற்குச் சென்று பயத்தினால் நிம்மதியிழந்து காணப்பட்டாள். இதற்கிடையில் ரேணுகா இது பற்றிய மேலதிக தகவல்களை தேட ஆரம்பித்தாள்.

சில நாட்களின் பின்னர், ரேனுகாவிற்கு சகிலாவின் போலி சுயவிபரம் மூலம் அதிகமான மாணவர்களுக்கு துஷ்பிரயோகமான செய்திகளை அனுப்பி வைத்திருந்தமை பற்றி கண்டறியப்பட்டது. இந்த மாணவர்கள் சகிலாவை கேலி செய்து, அவளது தகாத நடத்தை குறித்து கலந்துரையாடினார்கள்.

இது பற்றி சகிலா அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் ரேணுகா இச்செய்தியை சகிலாவிடம் கூறினாள். சகிலா அனைத்திலும் ஏமாற்றமடைந்தாள். இந்த குழப்பத்திலிருந்து மீள்வதற்கான வழிதெரியாமல் தவித்தாள்.
பாடசாலை செல்வதற்கு மனம் இன்றி ஓரிரு நாட்கள் வீட்டிலே இருந்தாள்.
அல்லும் பகலும் இதே சிந்தனையில் இருந்ததனால் தனது வாழ்க்கயை மாய்த்துக்கொள்ளவும் எண்ணினாள்
.

ரேணுகா, சகிலாவை தொலைபேசி மூலம் அழைத்து, போலி முகப்புத்தகக் கணக்குளை அகற்ற உதவும் ஹிதவதி பற்றி தான் அறிந்த விடயங்ளை கூறி தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை கூறினாள். சகிலா ஹிதவதியை தொடர்பு கொண்டாள். ஹிதவதி முகவர் ஒருவரிடம் குறித்த போலி கணக்கு தொடர்பான அனைத்து விடயங்களையும் கூறினாள். அவள் கூறுவதை கவனமாக செவிமடுத்த ஹிதவதி முகவர் சகிலாவின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியதோடு குறித்த போலிக் கணக்கை பற்றி புகாரளிக்கவும், அகற்றவும் உதவுவதாகவும் கூறினார். சகிலா மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும் என ஹிதவதி முகவர் உணர்ந்ததால் அவளை விசேட உள சுகாதார உதவி சேவைக்கு (1926) தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.

சகிலாவின் போலிக் கணக்கு தொடர்பாக முகப்புத்தகத்திற்கு தெரிவித்த ஹிதவதி, அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட கணக்கு அகற்றப்பட்டதை ஹிதவதி சகிலாவிற்கு தெரிவித்தபோது, அவள் நிம்மதியடைந்து ஹிதவதி அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தாள்.

 

முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்:

  • ஹிதவாதியின் ஆதரவுடன் அல்லது கீழ் காட்டப்பட்டுள்ள படிகளின் படி https://www.hithawathi.lk/ta/how-do-you-report-an-account-or-page-thats-pretending-to-be-you-or-someone-else-ta-2/ போலி முகப்புத்தகக் கணக்குகள் பற்றி உடனடியாக புகாரளிக்கவும்
  • நீங்கள் இது போன்ற சம்பவங்களினால் மனக்கவலையடைந்தால் 1926 (விசேட உள சுகாதார உதவி சேவை) இனை தொடர்பு கொள்ளவும்
  • உரிய ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சைபர் கிரைம் முறைப்பாடுகள் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடுகளை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திடம் அல்லது “பணிப்பாளர், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். மேலும், dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்