கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

ருஷி 10 வது தரத்தில் படிக்கும் 15 வயது பாடசாலை மாணவியாவார் . அவரது பாடசாலை தமது பேஸ்புக் பக்கத்தை ருஷியின் விளையாட்டுப்போட்டி புகைப்படங்களுடன் புதுப்பித்துள்ளது.
ஒரு நாள் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் பெற்றோர்களில் ஒருவர், தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தும் போது, ருஷியின் புகைப்படங்களுடன் கூடிய கணக்கொன்றை கவனித்தார். ருஷியையும் அவளுடைய தாயையும் அவர் அறிந்திருந்ததால், ருஷியின் அம்மாவிடம், ருஷி பேஸ்புக்கை பயன்படுத்துகிறாரா என்பதை சோதிக்க சொன்னார்.

இது குறித்து அம்மா ருஷியிடம் கேட்டபோது, தன்னிடம் பேஸ்புக் கணக்கு இல்லை என்று ருஷி கூறினார். அடுத்த நாள், ருஷியின் அம்மா தனது நண்பரைச் சந்திக்கச் செல்லும்போது இந்தத் தகவலை குறிப்பிட்டு ருஷி பேஸ்புக் ஐப் பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

ருஷியின் பெயரையும் பாடசாலையின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி கணக்கு என்பதை இந்த விடயம் நிரூபிக்கிறது.

இத்தகைய நிலைமையை எவ்வாறு நிர்வகிப்பது:
பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கும் ஆள்மாறாட்டம் செய்வதற்கும் பேஸ்புக்கில் முறைப்பாடு செய்யவும் https://www.facebook.com/help/contact/295309487309948