கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இதில் குறிப்பிடப்படும் பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

குடும்ப பிரச்சினைகள் காரணமாக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரேணு தனது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார்,  தனது குழந்தையை வளர்ப்பதற்காக வாழ்கையில்  ரேணுவுக்கு தனியாக போராட வேண்டியிருந்தது. இந்நிலையில் தனது குழந்தையை தனது அம்மாவுடன்  விட்டுவிட்டு  வேலைக்காக வெளிநாடு செல்ல அவர் முடிவு செய்தார்.

நாட்கள் கடந்து செல்லும் போது அவரது விடாமுயற்சியால் அதே நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக அவரால் வர முடிந்தது.  இதன் மூலமாக பிள்ளையின் தேவைகளுக்காக இங்கு பணத்தை அனுப்ப அவரால் முடிந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தான் சாதித்த எல்லா விடயங்கள் குறித்தும்  அவர் மகிழ்ச்சியை  உணர்ந்தார். இருந்த போதிலும் நாளாக நாளாக தாயின் வயது அதிகரித்து செல்லுவதால்  தாய்க்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால் பிள்ளையை தொடர்ந்து கவனிக்க தாயின் உதவியை பெற முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார்.

இதற்கிடையில், அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக  பேஸ்புக் கணக்கொன்றை  உருவாக்கினார். தனது வாழ்க்கை சரியாக நகர்கிறது  என்பதை அனைவருக்கும் காண்பிப்பதற்காக தனது  அழகான மிகவும் ஈர்க்கக்கூடிய படங்களை பகிரங்கமாக அதில் பதிவேற்றினார். இந்த எண்ணம் தெரியாத நபர்களைக் கூட அவரது சுயவிவரத்தைப் பின்பற்றச் செய்தது. இதன் விளைவாக, தினமும் அவருக்கு இங்கும் அங்கும் இருந்து பல நட்புக் கோரிக்கைகள் கிடைத்தன.

வேலையின் பின்னர் , ரேணுவுக்கு பெரிதாக செய்வதற்கு எதுவுமே இருக்கவில்லை. எனவே அவர் பேஸ்புக் மற்றும் யூடியூபில் அதிக நேரம் செலவிடப் பழகினார். ஒன்லைனில் அரட்டையடிக்க ஆட்கள் இருக்கும்போது அவர்  தனிமையை  உணரவில்லை. ஒரு நாள் கவீன் என்ற நபர் தன்னுடன் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறார் என்பதை ரேணு  உணர்ந்தார்;

கவீன்: உங்களுக்கு ஆண் நண்பர் இருக்கிறாரா?

ரேணு: எனக்கு 7 வயது மகன் மட்டும் தான்  ..

கவீன்: தனியே  மகன் மட்டும் இருக்கிறானா? அதுவும்  கணவன் இல்லாமல் ?

ரேணு: நாங்கள் பிரிந்து தனியாக வாழ்கிறோம் ..

கவீன்: ஓ அப்படியா..! மன்னிக்கவும், நீங்கள் மிகவும் இளமையாக இருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாக யூகிக்க முடியாது. உங்கள் உருவத்தை பராமரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

கவீன்: நான் ஒரு விடயம்  சொல்லலாமா?

ரேணு: ஒ.. சொல்லுங்கள்

கவீன்: எனக்கு உங்களை பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்க விரும்பினால், நான் உன்னை எப்போதும்  உங்களை நேசிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். என் மகனைப் போலவே உங்கள் மகனையும் கவனித்துக்கொள்வேன் . நீங்கள் நன்றாக யோசித்துப்பாருங்கள் உங்கள் முடிவை அறிய ஆசைப்படுகிறேன். விரைவில் ஒரு நல்ல பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்…!

அவள் தன் பிரச்சினைகளை மறைக்க முயன்றாலும், மற்றவர்களுக்கு முன்னால் தான் சந்தோஷமாக இருப்பதைக் காட்ட முயன்றாலும், தனக்கும்  குறிப்பாக தனது பிள்ளைக்கும் ஆண் ஒருவரின் பாதுகாப்பும், தாம் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ அன்பும் தேவை என்ற உண்மையை அவள் ஏற்றுக்கொண்டாள். கவீன் எப்போதும் அவளிடம் கனிவாக இருந்தான், மகனுடன் கூட தொலைபேசியில் மிக நேர்த்தியாக பேசினான். அவளுடைய முன்னாள் கணவனுடன் ஒப்பிடும்போது அவளால் கவீனை நிராகரிக்க முடியவில்லை. கடைசியில் ரேணு தனது சம்மதத்தை கவினிடம் சொன்னார் . காதலர்கள் இரு நாடுகளில் வாழ்ந்ததால், அவர்கள் பெரும்பாலும் ஒன்லைன் அரட்டை மூலமாகவும்  வீடியோ அழைப்புகள் மூலமாகவும்  தங்கள் அன்பையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு,  நிதி ரீதியாக சிரமப்பட்டு கொண்டு இருந்த கவினுக்கு  புதிய தொழிலில் ஈடுபடுவதற்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. தனது நகைகளை அடகு வைத்து செய்து வருங்கால வாழ்க்கைத் துணைக்கு  பணம் கொடுக்க ரேணு  இரண்டு முறை யோசிக்கவில்லை. புதிய வியாபாரத்தை ஆரம்பித்த பின்னர்  ரேனுவுடன் பேசுவதற்கு கவினுக்கு நேரம் கிடைப்பது அரிதாகவிருந்தது. ரேணு  தானாகவே அவருக்கு போன்  செய்யும்போது கூட  கவின் எப்போதுமே சொல்வது.

ரேணு நான் இப்போது பிஸியாக இருக்கிறேன், பின்னர் உங்களை அழைக்கிறேன்

நான் வேலையில் இருக்கிறேன் அன்பே, நான் உங்களுடன் பின்னர் பேசுவேன்

உங்கள் பணத்தை விரைவில் திருப்பித் தருகிறேன்.  உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் !

பின்னர் ரேணுவுக்கு அழைப்பு எடுப்பதாக கூறிய போதிலும் கூட இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கூட கவின் ஒரு  அழைப்பையும் எடுத்ததில்லை .சில நேரங்களில் ரேணு தன் மீதான ஆர்வத்தை கவின் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடுமோ என்று பயந்தாள். ரேணு பணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை, ஆனால் தன்மீதான அக்கறை  கவீனுக்கு  இல்லாமல் போவதை அவளால் ஏற்க முடியவில்லை கவீனின் இந்த மாறுபட்ட  நடத்தைக்கான காரணம் அவளுக்கு புரியவில்லை. ரேணு கவீனைப்  பற்றி மேலும் அறிய முடிவு செய்து, தனது ஒன்லைன் காதல் கதையை தனது நண்பரான அயோமியிடம் சொன்னார், இது அவர் கவீன் யார் என்பதை நம்ப வைக்க ரேணுவுக்கு  உதவியது. தனியாக இருக்கும்  பெண்களை ஒன்லைன் வழியே காதல் வார்த்தைகளுடன் அணுகி அவர்களின் இதயங்களை வென்ற ஒரு மனிதர் கவீன். ரேணு தனது நண்பரால் செய்யப்பட்ட சோதனையால் அதிர்ச்சியடைந்து, ஏன் தன்னை ஏமாற்றினான் என்று கவீனிடம் கேட்டு செய்தியை அனுப்பினார். ஆனால் அதன்பிறகு, கவீனின்  தொடர்பு இலக்கத்தை அடைய முடியவில்லை. அவர் தனது பேஸ்புக் கணக்கிலிருந்தும் ரேணுவைத் தடுத்து வைத்திருந்தார். ரேணு தனது வெட்கக்கேடான அன்பைக் கண்டு அவமானமடைந்ததுடன் பணம் இல்லாமல் உதவியற்றவளாக மாறி  தற்கொலை செய்து கொள்வது போல் உணர்ந்தாள். ஆயினும் அவளுடைய மகன் காரணமாக அவளுடைய வாழ்க்கை அவளுக்கு தேவைப்பட்டது.

அயோமி உதவிக்காக ஹிதவதியை தொடர்பு கொள்ளுமாறு ரேணுவுக்கு பரிந்துரைத்தார். அவர் சொன்னபடி, ரேணு ஹிதவதியிடம் தனக்கு என்ன நடந்தது என்பதை கூறினார். இந்த  விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குற்றவாளிக்கு எதிராக சி.ஐ.டி சமூக ஊடக பிரிவுக்கு dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாக முறைப்பாட்டினை அளிக்க ஹிதவதி அறிவுறுத்தியது. மேலும், ஹிதவதி ரேணுவிடம் விமன் இன் நீட்  (WIN)  அமைப்பினை  இலவச சட்ட ஆலோசனைக்காக  தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டது . இறுதியில் ரேணு தன்னிடம்  பரிவு காட்டியதற்கும், தனக்கு பிடித்த வகையில் வாழுவதற்கு  வழிகாட்டியதற்கும் ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்: 

  • இணையத்தில் நீங்கள் பகிரங்கமாக பகிரும் படங்கள் எந்த வகையிலும் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (உதாரணமாக . போலி கணக்குகளை உருவாக்க, எதிரிகளால் தவறாக பயன்படுத்தப்பட வேண்டும்)
  • தெரியாத நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
  • அவர்களின் அரட்டையின் நோக்கம் எங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்பதால் நீங்கள் ஒன்லைனில் அரட்டை அடிப்பவர்களுடன் கவனமாக இருங்கள். (வீணாக நேரம் கடத்துதல் , மோசடி போன்றவை)
  • இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக இருந்தால், இலவச சட்ட உதவி  அல்லது ஆலோசனைக்கு விமன் இன் நீட்  (WIN) ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
  • தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், ஸ்கிரீன் ஷாட்கள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சைபர்-கிரிமினல் முறைப்பாடுகள்  சிஐடியிடம் ஒப்படைக்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் “பணிப்பாளர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,கொழும்பு 01” எனும் முகவரிக்கு அனுப்பப்படலாம். இதற்கு மேலதிகமாக dir.ccid@police.gov.lk வழியாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான தெரிவும் உங்களுக்கு உள்ளது