கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 18, 2025
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
ஒரு நாள் காலை, லஹிரு தனது தாயின் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு செய்தி தோன்றுவதைக் கண்டான்.
முதலில், லஹிரு உற்சாகமடைந்து, இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் பின்னர் அவன் ஹிதாவதி டீன்ஸ் ஹப் கூட்டத்தில் தனது ஆசிரியர் சொன்னதை நினைவு கூர்ந்தான்:
“ஒன்று உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நன்றாக இருந்தால், அது அநேகமாக மறைக்கப்பட்ட குறைபாட்டைக் கொண்டிருக்கலாம் அல்லது நம்பத்தகாததாக இருக்கலாம்..”
லஹிரு உடனடியாக தனது பெற்றோரிடம் செய்தியைப் பற்றிச் சொல்லி அதைப் புகாரளித்தான். ஹிதாவதி டீன்ஸ் ஹப் அமர்வுகளில் ஒன்றின் போது மோசடிகளைப் புகாரளிப்பது எப்படி என்பதை அவன் கற்றுக்கொண்டான்.
அன்று முதல், லஹிரு இதுபோன்ற மோசடிகள் குறித்து மற்றவர்களை எச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டான். அவன் பின்பற்றிய பொன் விதி:
“எல்லா செய்திகளையும் நம்பாதீர்கள். எப்போதும் முதலில் சரிபாருங்கள். நிகழ்நிலையில் பாதுகாப்பாக இருங்கள்!”
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- தெரியாத எண்களிலிருந்து வரும் செய்திகளை, குறிப்பாக அவர்கள் பணம் அல்லது வெகுமதிகளை உறுதியளித்தால் நம்பாதீர்கள்.
- கிளிக் செய்வதற்கு முன் எப்போதும் சிந்தியுங்கள். அது உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நன்றாக இருந்தால், அது அநேகமாக மறைக்கப்பட்ட குறைபாட்டைக் கொண்டிருக்கலாம் அல்லது நம்பத்தகாததாக இருக்கலாம்.
- சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புகாரளிக்க உங்கள் பயன்பாட்டில் உள்ள “புகாரளி” தெரிவைப் பயன்படுத்துங்கள். https://www.hithawathi.lk/ta/help-center-ta/social-media/
- மோசடிகள் பற்றி நம்பகமான வளங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.