கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 22, 2021

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.

அமாஸா தனது நிச்சயதார்த்தத்தினை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுடன் திருமணத்திற்கு பின் வேறு இடத்திற்கு புலம்பெயர்வதற்கான திட்டத்தையும் கொண்டிருந்தாள். அவளது நிச்சயதார்த்தத்திற்காக அங்கும் இங்கும் ஓடியாடி திறிந்தமையினால் ஓய்வின்றி இருந்த வேளை அவளது நண்பரிடமிருந்து,

“ஹெலோ அமாஸா நான் சில பதிவுகளை ஃபேஸ்புக் ஃபஷன் பக்கத்தில் கண்டேன்’. என கூறும் அழைப்பொன்றை பெற்றாள்.”

அவள் அதனை கேட்டு அதிர்ச்சியுற்று தனது நண்பரிடமிருந்து அந்த லிங்கை பெற்றாள். சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட செய்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த அவள் நீண்டகாலத்திற்கு முன் குறித்த அந்த புகைப்படங்கள் உரிய பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டன என்பதனையும் அறிந்திருந்தாள். எவ்வாறெனினும், இப்புகைப்படங்கள் அண்மையில் குறிப்பிட்ட ஃபஷன் பக்கத்தில் மீள்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் வெறுக்கக்கூடிய கருத்துக்களை பெற்றுள்ளதால் அவள் அதனை பார்த்து மனமுடைந்து போனாள்.

அவளது காதலன் இவற்றை பற்றி விழிப்புணர்வற்றிருந்தமையால் அவன் இந்த புகைப்படங்களை பார்த்தால் அவளது நிச்சயதார்த்தம் இந்த காரணத்திற்காக நிறுத்தப்படுமென அச்சம் கொண்டாள்.

அவள் மனச்சோர்வடைந்து ஹித்தாவத்திக்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த பதிவுகளை அகற்ற வேண்டுமென கூறி பயத்தில் அழுதாள். ஹித்தவத்தியும் இதனை முறையிட்டு அவளது புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெறுக்கக்கூடிய கருத்துக்களையும் புகைப்படங்களையும் குறித்த ஃபஷன் பக்கத்திலிருந்து அகற்றுவதற்கு உதவி செய்தார்கள்.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

  • தாங்கள் ஒரு பதிவையிடும் முன் இருதடவை, மூன்று, சிலவேளை மில்லியன் தடவைகள் சிந்தியுங்கள். குறித்த காலம் முதல் ஒரு தடவை தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை பின்நோக்கி செலுத்த முடியாது.
  • உங்களது அனுமதியின்றி மூன்றாம் நபர்கள் உங்களது புகைப்படங்களின் நகல்களை வைத்துக்கொள்ள முடியாதென்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • இவ்வாறான சூழ்நிலைகளில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக உணர்ந்தால், சட்ட ரீதியான உதவிக்கு ஆதரவிற்கு 1938 பெண்கள் உதவிமையம் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சை தொடர்புக்கொள்ளுங்கள். 1938 (Women Helpline – Ministry of Women & Child Affairs)
  • இவ்வகையான சந்தர்ப்பங்களில் தாங்கள் தாழ்வாக உணரும் போது 1926 (விசேட மனநிலை ஆரோக்கிய துரித எண் – 1926 (Special Mental Health Hotline) அல்லது சுமித்திரயோ (Sumithrayo) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.
  • உங்களது அனுமதியின்றி தங்களை உள்ளடக்கிய (படங்கள், காணொளிகள், மேலும் பல…..) வெளியிடப்பட்டிருப்பின் புகாரளிக்கவும்.: தேவையெனில் துணைக்கு ஹத்தாவத்தியைத் தொடர்பு கொள்ளவும். https://www.hithawathi.lk/