இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

மாதவி ஒரு அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியர். COVID-19 பரவல் காரணமாக கல்வி முறை ஒன்லைனில் மாற்றப்பட்டது. பாடசாலை வகுப்புகளில் பெரும்பாலானவை ஜூம், ஸ்கைப், மைக்ரோசாப்ட் டீம்ஸ் ,வட்ஸ்அப் போன்ற வெவ்வேறு ஒன்லைன் தளங்கள் வழியாக கற்பிக்கப்பட்டன இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு புதிய அனுபவம். ஆசிரியர்கள் அந்த முறையில் கற்பிக்க மாறவேண்டி இருந்ததுடன் மாணவர்களுக்கும் ஒன்லைன் மூலம் படிக்க வேண்டியிருந்தது.

அதன் அடிப்படையிலான , புதிய கற்பித்தல் நடைமுறைகளின் படி மாணவர்களின் உள்நுழைவு / கோரிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், வகுப்பில் பங்கேற்பாளர்களை ஆசிரியர் அனுமதிக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில் மாதவி ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், அது அவருக்கு மிகவும் பரிச்சயம் இல்லாத ஒருவராக இருந்தாலும் அவர் தனது மாணவராக இருக்கக்கூடும் என அனுமானித்து அந்த நபரின் கோரிக்கையை மாதவி ஏற்றுக்கொண்டார். பாடம் நடத்துவதற்கான பொதுவான நடைமுறை குரல் மற்றும் வீடியோ இரண்டின் வழியாகும். எனவே ஆசிரியரும் மாணவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பார்த்துக் கொள்ள முடியும், அந்த ரீதியில் புதிதாக சேர்ந்த மாணவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாததுடன் அவரை / தன்னை அறிமுகப்படுத்துவதற்கான மாதவியின் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்கவில்லை. மாதவிக்கு மாணவனை அடையாளம் காணவோ, பார்க்கவோ முடியவில்லை. சிறிது நேரம் கழித்து “புதிய மாணவர்” வகுப்பிலேயே இல்லை.

இதற்கிடையில் மறுமுனையில் என்ன நடக்கும்?

மாதவியின் பாடத்தின் போது “குறிப்பிட்ட அறியப்படாத மாணவரால்” மாதவி கற்பிக்கும் போது மாதவியின் சினப் சொட்களையும் ( snapshot ) வீடியோ கிளிப்களையும் பெற முடிந்தது. “அறியப்படாத மாணவர்” மாதவியை கொடுமைப்படுத்தவும், அவருக்கு எதிராக “வெறுக்கத்தக்க விதத்திலான ” கதைகளை உருவாக்க பயன்படுத்தக்கூடியதாக சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களைத் திருத்தி உருவாக்கியுள்ளார். இந்த நபர் அந்த இடுகைகள் மற்றும் வீடியோ கிளிப்புகளை பல்வேறு வகையான பொதுவான சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பரப்பினார்.

மாதவியின் நிலையை எடுத்துக் கொண்டால் – அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவர் ஒரு சமூக ஊடகத்தைப் பின்பற்றுபவர் அல்ல. இவரைப் பற்றிய செய்தியை கேட்ட அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்தபோது மாதவி அதிர்ச்சியடைந்தார். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்பது பற்றி மாதவிக்கு எந்த எண்ணமும் இல்லை, அவர் மிகுந்த பயமடைந்தார் ஏனென்றால் அது அவரால் கற்பனை செய்ய முடியாத ஒன்று.

அவளுடைய நண்பர் ஒருவர் அவருக்கு ஹிதவதி பற்றி அறிவுறுத்தினார். தனக்கு கிடைத்த எண்ணை உடனடியாக டயல் செய்து ஹிதவதியை மாதவி தொடர்பு கொண்டார் . அங்குள்ள பெண் உத்தியோகத்தரிடம் நடந்த சமபவத்தை விளக்கினார் . அந்த உத்தியோகத்தர் மாதவிக்கு அறிவுரை கூறி மிகவும் அமைதியாக பேசினார். அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும் இந்த வகையான நிகழ்வுகளை கையாளுவதற்கும் வழிகள் உள்ளன என்பதை ஹிதவதி மூலமாக மாதவி அறிந்து கொண்டார் . மாதவி மிகவும் மகிழ்ச்சியாகவும், ஹிதவதியின் சேவை தொடர்பில் மிகவும் நன்றியுணர்வாகவும் இருந்தார்.

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:

  • ஒன்லைனில் இணைக்கப்பட்ட உறுப்பினர்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்
  • ஒன்லைனில் பணிபுரியும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  • இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக இருந்தால் சட்ட உதவிக்காக  1938 (மகளிர் உதவிச் சேவை – மகளீர் மற்றும் சிறுவர் விவகார  அமைச்சு  ) ஐ தொடர்பு கொள்ளவும்.
  • இந்த வகை சம்பவங்கள் காரணமாக நீங்கள் கஷ்டத்தை உணரும்போது 1926 (சிறப்பு மனநல உதவிச் சேவை) அல்லது சுமித்ராயோவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • உங்கள் அனுமதியின்றி உங்களைப் பற்றிய தகவல்கள் (படங்கள், வீடியோக்கள் போன்றவை…) வெளியிடப்பட்டால் முறைப்பாடு செய்யவும்  தேவைப்பட்டால், உதவிக்கு ஹிதவதியைத் தொடர்பு கொள்ளுங்கள்.