கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 19, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

 

வெளிநாட்டு நவீன சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றின் அலைபேசி இலக்கத்தில் இருந்து WhatsApp மூலமாக ஒன்லைன் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக, சித்துமிக்கு ஒரு செய்தி வந்தது. அவளது அலைபேசி இலக்கமானது ஒரு வேலை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதிய அவள் மேலதிக தகவல்கள் வழங்குமாறு வினவினாள்.

சித்துமி : இந்த வேலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

முகவர் : நாங்கள் உங்களுக்கு ஒரு இணைப்பை அனுப்புவோம். அதை கிளிக் செய்ய வேண்டும். அது உங்களை IMDb மதிப்பீடுகளுக்கு அழைத்துச் செல்லும். ஒரு திரைப்படத்தைத் தெரிவு செய்து, “ஏற்கனவே பார்த்தது” அல்லது “பார்க்க வேண்டும்” என்பதைத் தேர்ந்தெடுத்து, எங்களுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட்டை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு ஸ்கிரீன்ஷாட்டுக்கும் ரூ.150/- கிடைக்கும். நீங்கள் மூன்றை அனுப்பும் போது, உங்கள் கணக்கில் ரூ.450/- கிடைக்கும். நாம் இதனை பரீட்சித்து பார்ப்போம். இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் xxxxxxxxxxxxxx.

சித்துமி : சரி

 

அவர்கள் சொன்னபடி அவள் கிளிக் செய்தாள். பரீட்சை வேலை செய்தது, மேலும் அவள் ஏஜென்சி உருவாக்கிய டெலிகிராம் குழுவில் இணைந்து கொண்டாள். குழுவில் உள்ளவர்கள் தாங்கள் பெற்ற பணத் தொகைகளின் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்தனர். சித்துமி தன்னம்பிக்கையாக உணர்ந்து, ஆரம்பத்திலேயே மூன்று ஸ்கிரீன் ஷாட்களை அனுப்பி பணம் பெற்றாள். அவள் இதை தொடர்ந்து செய்து சம்பளம் வாங்கிக் கொண்டாள்.

முகவர் : : நீங்கள் மிகவும் நன்றாக செய்கிறீர்கள். ஒரு புதிய வேலையுடன் உங்களை விஐபி குழுவில் சேர்க்கப் போகிறோம். நாங்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யுங்கள். ஒரு பொருளை வாங்குங்கள். அது ரூ.5000/- ஆக இருப்பின், நாங்கள் உங்களுக்கு ரூ.6500/- செலுத்துவோம்.

சித்துமி அக்குழுவில் சேர்ந்தாள். அனைவரும் 10-15 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கி, பொருட்களின் மதிப்பை விட அதிக பணம் பெற்றுக் கொண்டனர். சித்துமியும் ரூ.5000/- பொருளை வாங்கி பணம் பெற்றாள். அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் அவள் ரூ.32000/-க்கு ஒரு பொருளை வாங்கினாள், ஆனால் அவளுக்கு பணம் செலுத்தப் படவில்லை. அவள் அதைப் பற்றி கேட்டாள்.

முகவர் : : அதில் ஒரு பிழை உள்ளது. மேலும் ஒரு ரூ.32000/- பொருளை வாங்குங்கள். நாம் பின்னர் செலுத்துவோம்.

சித்துமி அதை வாங்கினாள், ஆனால் இம்முறையும் அவளுக்கு பணம் செலுத்தப் படவில்லை. ஏன் என்று மீண்டும் வினவினாள்.

முகவர் : : நீங்கள் அறிவுறுத்தல்களை சரிவரப் பின்பற்றவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு ரூ.32000/- பொருட்களை வாங்க வேண்டும் அல்லது ஒரு ரூ.93,000/- பொருளை வாங்க வேண்டும். அறிவுறுத்தல்களை சரியாக வாசிக்கவும்.

சமீபத்தில் ஒரு கடன் வாங்கியதால் சித்துமியிடம் பணம் இருந்தது. முகவர் அறிவுறுத்தியபடி பணம் பெறுவதற்காக அவள் ரூ.93,000/- பொருளை வாங்கினாள். ஆனால் அவளுக்கு மீண்டும் பணம் வழங்கப்படவில்லை. சம்பாதிப்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்குங்கள் என்று மட்டுமே அம்முகவர் அவளை தள்ளிக் கொண்டே இருந்தார்.

முகவர் : :நீங்கள் அறிவுறுத்தல்களை சரியாகப் வாசிக்கவில்லை. மேலும் ஒரு ரூ.93,000/- பொருளை வாங்குங்கள். நாங்கள் ரூ.500,000 செலுத்துவோம்.

இக் கணத்தில், சித்துமி தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து அவள் மேலும் பொருட்கள் வாங்குவதை நிறுத்தினாள். நிறைய பணத்தை இழந்த அவள், அவளது கணவர் கேட்டுக் கொண்டபடி ஆதரவுக்காக ஹிதவதியை தொடர்பு கொண்டாள்.

சித்துமிதன் கதையை கூறியதோடு மட்டுமல்லாது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து ஹிதவதியிடம் விவரித்தாள். வாட்ஸ்அப் / டெலிகிராமில் நிறுவனத்தைப் பற்றி புகாரளிப்பது மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிசிஐடி) புகார் செய்வது குறித்து ஹிதவதி அவளுக்கு அறிவுறுத்தியது.

தன்னை செவிமடுத்ததற்கும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டியதற்கும் சித்துமி ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தாள்.

 

 

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நன்றாகத் தோன்றும் வேலைகள் தொடர்பில் கவனத்ததுடன் இருங்கள். (சம்பந்தப்பட்ட வேலை மற்றும் பொறுப்புகளுக்கான ஊதியம் விதிவிலக்காக அதிகமாக இருந்தால், அது ஒரு மோசடியாக இருக்க கூடும்.)
  • அவ்வப்போது பிரபலமாகி வரும் இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். (https://www.hithawathi.lk/ta/help-center-ta/real-time-cases-ta/#Scam)
  • பண மோசடிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரும்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவை (சிசிஐடி) அணுகவும் (தொலைபேசி: 011 238 1045, மின்னஞ்சல்: dir.ccid@police.gov.lk) அல்லது காவல்துறை அவசரநிலையை (அவசரத் தொலைபேசி எண் – 119) தொடர்பு கொள்ளவும். , IGP யை நாடுங்கள் – telligp.police.lk , இணையதளம்: https://www.police.lk).
  • நீங்கள் ஏதேனும் மோசடிகளைச் சந்தித்தால், ஆதரவுக்காக ஹிதவதியை அழையுங்கள்.