கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

தர்ஷி பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவியாவார் , அவர் “நாடகமும் அரங்கியலும்“ பாடத்தினை சிறப்பு பாடமாக தெரிவு செய்து பயின்று கொண்டிருந்தார். இதற்கிடையில், அவர் இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட அதே துறை சார்ந்த வேலைகளுக்கும் விண்ணப்பித்து வந்ததுடன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் அந்த வேலையில் இணைய திட்டமிட்டுள்ளார்.

ஒரு அதிகாலையின் பின்வரும் மின்னஞ்சல் அவருக்கு வந்தது,

பல நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தேடி விண்ணப்பித்து இருந்த நிலையில் இந்த நிறுவனத்தில் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்ததை தர்ஷியால் நினைவில் கொள்ள முடியவில்லை. எப்படியிருந்தாலும், சில பட்டம் பெற்றவர்கள் கூட வேலையில்லாமல் இருக்கும் காலத்தில் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று அவர் நினைத்தார் . ஆகவே ஸ்கைப் வழியாக அவர்களை தொடர்பு கொள்ள மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தார்.

நிறுவனம் அறிவித்தபடி , ஒரு பெண்மணி இந்த நேர்முகத்தில் தர்ஷியை தொடர்பு கொண்டதுடன் அவரைப் பற்றி சற்று விவரிக்கும்படி கேட்டார். தர்ஷி நிறுவனத்தின் அணுகுமுறையை மிகவும் வசதியாக உணர்ந்தத்துடன் நேர்முகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். அந்த பெண்மணி மிகவும் புரிந்து கொள்ளக்கூடிய நபராக இருந்ததுடன் தர்ஷியின் பட்டப்படிப்பு முடியும் வரை நிறுவனம் அவருக்காக இந்தப் பதவியை நிறுத்தி வைத்திருக்க முடியும் என்றும் கூறினார், ஆனால் அவருக்காக இந்த பதவியை வழங்க தமது உயர்மட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறுவதற்காக தர்ஷியின் கவர்ச்சியான அல்லது வெளிப்படையான ஆடைகளை அணிந்த சில படங்கள் தேவைப்பட்டது .

தர்ஷியின் மனம் அவரிடம் “பெண்ணே, இந்த வாய்ப்பை இழக்காதே” என்று கூறியது . அதன்படி, எனவே தனது சில கவர்ச்சியான படங்களை அனுப்பவும், வேலையை உறுதிப்படுத்தவும் அவர் முடிவு செய்தாள். இதன் மூலம் பிரபலமடைந்து பின்னர் பிரபல்யமான திரைப்பட நட்சத்திரமாக மாற வேண்டும் என்று அவர் கனவு காணத் தொடங்கினார்.

அவர் அந்தப் படங்களை அனுப்பியவுடனே, நிறுவனத்தின் முகாமையாளரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்ததுடன் அதன் போது ஏராளமான மாற்றியமைக்கப்பட்ட / போலியான புகைப்படங்கள் விண்ணப்பதாரர்களால் அனுப்பப்படுவதால் வீடியோ மூலமாக தர்ஷியின் உண்மையான அழகை ஆராய்வதற்காக அவளது மேற்புறத்தை அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார், .

இந்த முறை இரண்டு முறை யோசிக்காமல் தர்ஷி “நான் மிகவும் வருந்துகிறேன் இதனை என்னால் செய்ய முடியாது ” என்றார்.

இதனையடுத்து முகாமையாளர் தனது மனநிலையை இழந்தார், அவருக்குள் இருந்த ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய் வெளியே வந்தது. அவர் அழைப்பினை துண்டித்ததுடன் பின்வருமாறு தர்ஷிக்கு செய்தி அனுப்பினார். “உனது நிர்வாண உடலை நீ எனக்குக் காட்டவில்லை என்றால், நீ அனுப்பிய படங்களைத் திருத்தி ஆபாச தளங்களில் பதிவேற்றுவேன். முட்டாள்தனமாக இருக்க வேண்டாம். அதை எனக்குக் காட்டவும் அல்லது முழு உலகத்திற்கும் காட்டவும். உனக்கு விருப்பம் என்றால் 24 மணி நேரத்திற்குள் எனக்கு பதிலளிக்கவும். இல்லையென்றால், உனது வாழ்க்கையை அழிக்க வேண்டியதை நான் செய்வேன் ”.

தர்ஷி முற்றிலுமாக உடைந்து போனார் , அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. முழு கதையையும் தனது சிறந்த தோழியான ஆச்சினியிடம் சொன்னாளர், அவர் உடனடியாக ஹிதவதி உதவிச் சேவையில் இலக்கத்தினை கொடுத்தார். தர்ஷி ஹிதவதியைத் தொடர்புகொண்டு தனது பிரச்சினையை விளக்கினார். இந்த குற்றவாளிகளைப் பற்றி விசாரிக்க, அவர்களுடன் மேலதிக தொடர்புகளைத் தவிர்த்து, குற்றப் புலனாய்வுப்பிரிவின் சமூக ஊடாக பிரிவுக்கு dir.cid@police.lk என்ற மின்னஞ்சல் வழியாக முறைப்பாடு செய்யுமாறு ஹிதவதி அவரை அறிவுறுத்தியது. மேலும், தர்ஷியிடம் இணையத்தில் வெளியிடப்பட்ட படங்கள் ஏதேனும் இருப்பதைக் கண்டால் உடனடியாக தம்மிடம் திரும்பி வருமாறும் ஹிதவதி கேட்டுக் கொண்டது , அப்படியான ஒரு நிலையில் ஹிதவதியால் அவை தொடர்பில் முறைப்பாடு செய்யவும் அவற்றை அகற்றவும் உதவ முடியும்.

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:

  • ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறும்போது, அந்த நிறுவனத்திற்கு பதிலளிப்பதற்கு முன்பு இணையத்தில் அவர்களைப்பற்றி தேடுங்கள். அது உண்மையானதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். (இதற்கு முன்பு நீங்கள் அவர்களுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், அந்த வாய்ப்பு அநேகமாக ஒரு மோசடியாகும் )
  • உங்கள் படங்கள் / வீடியோக்கள் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேறு ஏதேனும் உள்ளடக்கம் இணையத்தில் வெளியிடப்பட்டால் அதைப் பற்றி முறைப்பாடு செய்யவும் அகற்றுவும் ஹிதவதியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • உரிய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், ஸ்கிரீன் ஷாட்கள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சைபர்-கிரிமினல் முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாக “இயக்குநர், குற்றப் புலனாய்வுப் பிரிவு , கொழும்பு 01” எனும் முகவரிக்கு அனுப்பப்படலாம். மேலதிகமாக, dir.ccid@police.gov.lk வழியாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான தெரிவும் உங்களுக்கு உள்ளது