கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29, 2021

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.

நிலான் தனது இளைய தங்கையிடம் நகரத்திலுள்ள கணினி வகுப்பைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதும் அவளிடம் 2 மீட்டர் அளவில் இடைவெளி பேணுவது வழக்கம். ஒரு மாலைப்பொழுதில் இருவரும் கடையொன்றை கடக்கும் போது கடையின் கதவருகில் கும்மலொன்று நின்றுக் கொண்டிருந்தது. அதில் ஒருவன்,

அட, கவர்ச்சியானவளே…… எங்கே செல்கின்றாய்?
என கூறுவது நிலான் காதிற்கு எட்டியது
(அவன் அவ்வாறு சரசமாடும் போது அவர்களில் சிலர் சிரித்தனர்.)

நிலான் தனது தங்கையுடன் விளையாட எண்ணும் அந்த நபர் மீது மிகுந்த கோபம் கொண்டதுடன் விரைவாக நடந்து சென்று அவனது முகத்தைத் தாக்க ஆரம்பித்தான். குறித்த அந்த கும்பல் முற்றிலும் எதிர்பார்க்காதவொன்று அது, ஏனெனில் அவள் தனியாக செல்கின்றாள் என்றே அவர்கள் எண்ணினார்கள். கும்பல் ஒன்றுசேர்ந்த அச்சண்டையை நிறுத்தினார்கள். ஆனால், நிலான் மீண்டும் இவ்வாறு ஒருபோதும் நடந்துக்கொள்ள கூடாது என எச்சரித்த வண்ணம் அங்கிருந்து சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து, நிலானின் தங்கைக்கு இனந்தெரியாத நபரொருவரிடமிருந்து அழைப்புகள் வரத்தொடங்கியதுடன், அவன் வெளியில் சந்தித்து உல்லாசமாக இருக்க முடியுமா? என அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அது அவளுக்கு மிகவும் தொந்தரவானது. மேலும், அவற்றில் ஒருவன், இவளது இலக்கத்தை வாட்ஸ்அப் குழுமத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக கூறினான். நிலான் தனது நண்பர்கள் வாயிலாக, தனது அப்பாவி தங்கையை பற்றி அவதூறான விதத்தில் செய்திகளை வாட்ஸ்அப் குழுமத்தில் அந்த கும்பல் அதாவது, அச்சூழ்நிலையில் சிக்கி அமைதியானவனே இவ்வாறு பரப்புவதாக தெரிந்துக்கொண்டான்.

நிலானின் நண்பன் இவ்விடயம் தொடர்பில் ஹிதாவதியுடன் (Hithawathi) தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரை செய்தான். அதன்படி, ஹிதாவதியின் உதவிமையத்தை தொடர்பு கொண்டு நடந்தவற்றை விவரித்தான். ஹிதாவதி (Hithawathi) அந்நபரின் துன்புறுத்தலுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென அறிவுரை வழங்கியது. இல்லையெனில், வாட்ஸ்அப்பிலிருந்து குறித்த விடயத்தை அழிக்குமாறு அறிக்கையளிப்பதற்கான வாய்ப்பும் அதிலிருந்த போதும் இவ்விடயத்தை சட்டப்படி முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென அவன் எண்ணினான். ஹிதாவதி அவர்களை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தை (Tel: 011 244 4444) இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அவர்களை வழிகாட்டியது. நிலான், அவனது வலியை புரிந்துக்கொண்டமைக்காகவும் அவன் என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டியமைக்காவும் ஹிதாவதிக்கு (Hithawathi) நன்றி தெரிவித்தான்.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

    • தாங்கள் வாட்ஸ்அப்பின் மூலம் துன்புறுத்தப்படுகின்றீர்கள் எனில், கீழ் காணும் படிமுறைகளை பயன்படுத்தி முறையீடு செய்ய முடியும்.
      https://www.hithawathi.lk/help-centre/social-media/whatsapp/reporting-on-whatsapp/.
    • தேவைப்படுமிடத்து, ஹிதாவதியை (Hithawathi) (Tel: 011 244 4444) இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
    • சிறுவர்கள் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கென முன்னுரிமை வழங்கப்பட்ட காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தைத் தொடர்புக் கொள்ளவும்.
    • சட்டத்தை தன் கைக்கு எடுப்பதை தவிர்த்து, இவ்வாறான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகங்கள் வாயிலாக அவற்றுக்கான தீர்வுகளை காண முயற்சியுங்கள். (உதாரணமாக: சுய பாதுகாப்பிற்காக ஒருவரை தண்டிக்கலாம். ஆனால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு அல்ல.)