கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 6, 2022

Tinder பயன்பாடு (அப்) காதல் உறவைத் தொடங்க இருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனக்குப் பொருத்தமானவரைத் தேடிக் கொள்வதற்கான இடமாக அமைந்த போதிலும், தீய எண்ணம் கொண்ட மோசடியாளர் கூட இந்த பயன்பாட்டை பாவிக்கலாம். டின்டா (Tinder) பயன்பாட்டில் பாதுகாப்புக்காக அவ்வாறான கணக்குகளை அறிக்கையிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டில் நேர்ந்ததை ரிப்போட் இடுதல்

பயன்பாடு (அப்பின்)

    • திரையில் தென்படும்
      பயனரின் சுய விபரத்தைத் (பிரோபைல்) திறக்கவும் > கீழே சென்று “Report(அறிக்கையிடவும்)”மீது கிளிக் செய்யவும்.
    • உங்கள் பொருத்தப் பட்டியலில் (Match List)
      பயனரைத்
      (user)தெரிவு செய்து செய்தித் திரையை திறக்கவும் > பயனரின் படத்தின் மீது கிளிக் செய்து பிரோபைலை திறக்கவும் > கீழே சென்று “Report(அறிக்கையிடவும்)”மீது கிளிக் பண்ணவும்.

மின்னஞ்சல் மூலம் ரிப்போட் செய்தல்
டின்டா அவர்களின் கொள்கைகளை அல்லது சமூக வழிகாட்டல்களை மீறும் எந்தவொரு நடத்தை / செயலை உடனே அறிக்கையிடுவதற்கு ஊக்குக்கிறது. மின்னஞ்சல் ஊடாக அறிக்கை சமர்ப்பிக்க, உங்களுக்கு இதனூடாக தொடர்பு கொண்டு பின்வரும் தகவல்களை உள்ளிடலாம்.

  • அறிக்கையிடுவதற்கான (ரிப்போட் செய்வதற்கான) காரணம்
  • நீங்கள் அறிக்கையிடும் கணக்கில் தென்படும் பெயர், வயது, சுயவிபரம் மற்றும் நிழற்படங்கள் (ஸ்கீறீன் ஷொட் மிகவும் சிறந்ததாகும்)
  • பயனரின் இருப்பிடம் (location), தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி (தெரிந்தால்)

ஆள்மாறாட்டம் செய்யும் (பொய்யாக / impersonating) கணக்கை அறிக்கையிடல்

Tinder டிண்டாவில் யாராவது உங்களைப் போலவே ஆள்மாறாட்டம் செய்திருந்தால் இந்த விண்ணப்பப்படிவத்தின் மூலம் அறிக்கை இடவும். அதன் கீழ் கிளிக் செய்வதால் கிடைக்கும் (drop-down) மெனுவத்தின் ஊடாக “ஆள்மாறாட்டம் செய்கிறார் (someone is impersonating me)”என்பதைத் தெரிவு செய்து உங்களைப் போல பொய்யாக ஆள்மாறாட்டம் செய்யும் கணக்கின் தகவல்களையும் உள்ளடக்கியதாக கோரப்பட்ட விபரங்கள் அனைத்தையும் நிரப்பவும்.

உங்களைத் தெரிந்தவராக ஒருவர் தன்னைக் காட்டிக் கொள்வாராயின்,
தயவு செய்து இந்த விண்ணப்பப்படிவத்தின் ஊடாக டிண்டா குழுவுடன் தொடர்பு கொள்வதற்கு குறித்த நபரை ஊக்கப்படுத்துங்கள். அதைத் தவிர, “What are you reporting” கீழ் “Someone I know is being impersonated (என்னைத் தெரிந்தவராகக் காட்டிக் கொள்கிறார்)” என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கும், உங்களைத் தெரிந்தவர்களுக்கும் குறித்த பொய்யான கணக்கை நேரடியாக அறிக்கை இடலாம்.

Source:  https://www.help.tinder.com/hc/en-us/sections/115001143883-Report-a-Safety-Concern-or-Incident