கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 5, 2021

நீங்கள் எப்போதாவது கறுப்புப் பணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உங்களில் பெரும்பாலோர் ‘ஆம்’ என்று சொல்லலாம்

அந்த பணம் ‘கறுப்பு’ என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் அவற்றை சம்பாதிப்பதற்கான ஆதாரம் முற்றிலும் சட்டவிரோதமானது.

அவை பாதாள உலக நடவடிக்கைகள், மோசடிகள் அல்லது பிற மோசடிசார் செயல்கள் மூலம் ஆக்கப்படலாம்.

ஆனால்,

மோசடி செய்பவர்கள் அந்த தவறான பணத்தை சுத்தம் செய்வதற்கும் அவர்களின் தேவைகளுக்கு சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும் முயற்சி செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

உங்கள் பதில் இங்கே மாறுபடலாம்.

இது மிகவும் தெளிவாக இல்லை அல்லவா?

அது நிதித்தூய்தாக்கல் என்று அழைக்கப்படுகிறது.

சரி, யார் கவலைப்படுகிறார்கள்? “அது எங்களுக்குப் பொருட்டில்லை.” –

நீங்கள் அந்த தூய்தாக்கலின் ஒரு பகுதியாக மாறும் நாள் வரை நீங்கள் இப்படியே நினைப்பீர்கள்;

மோசடி செய்பவர்கள் தங்கள் தவறான பணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு உங்களைப் பயன்படுத்தும் செயலானது இணைய வெளியில் இரகசியமாக நடக்கிறது.

எப்படி?

உங்களை ஈர்க்க அவர்கள் தங்கள் உத்திகளைப் பயன்படுத்தி, இதயத்தைத் தொடுகின்ற கதைகளுடனான மின்னஞ்சல்கள் அல்லது இணையவழி அரட்டைகளை உங்களுக்கு அனுப்பலாம்.

அவர்கள் அனைவரும் பொருட்படுத்தத் தகாதவை.

மோசடி செய்பவர்கள் எப்போதும் நடிப்பதிலும், இதயங்களை வெல்வதிலும் சிறந்தவர்கள்.

எனவே அவர்கள் அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அத்துடன், உங்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவது போல் நடிக்கலாம் ..

இறுதியில் அவர்கள் ஒரு வங்கிக் கணக்கைத் திறப்பதில் சிக்கல் இருப்பதாக ஒரு கட்டத்திற்கு வந்து, உங்களுடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, தங்கள் சொந்தப் பணத்தை இங்கேயும் அங்கேயும் மாற்றிக் கொள்ளுமாறு அல்லது அவர்களுக்காக அதைப் பெறுமாறு  உங்களிடம் கேட்டுக்கொள்வார்கள்.

அதனை ஒரு நட்பு முறையில் செய்ய இது ஒரு வழி ஆகும்.

மேலும், இது ஓர் இணையவழி வேலைவாய்ப்பாக வரக்கூடும். இதில் கடமைகள் மிகவும் எளிமையானவை,

அவர்கள் உங்களிடம் கேட்கும் பணத்தை மாற்றுவது அல்லது அவர்களுக்காகப் பெறுவது போன்றவையாக இருக்கும்.

‘மனி கிராம்’, ‘வெஸ்டர்ன் யூனியன்’ அல்லது பிற பிரபலமான பணாப்பரிமாற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்குமான முறையைப் போன்றதாக எளிமையான முறையாக அது இருக்கும்.

உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல தரகுத்தொகை வழங்கப்படும், அதுவும் கஷ்டப்படாமல் கிடைத்த பணம்.

நீங்கள் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளும் வரை நீங்கள் அந்த வேலையை அனுபவிக்க முடியும்.

காவல்துறை வசம் சிக்கிய தருணத்திலேயே நீங்கள், உங்கள் அப்பாவித்தனத்தை குற்றவாளிகள் தங்கள் காரியங்களைச் செய்ய பயன்படுத்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

மோசடி முயற்சிகளுக்கு குற்றவாளிகள் வெவ்வேறு வழிகளையும் வழிகளையும் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு முறைகள் மட்டுமே அவர்களுக்கு உரியவையல்ல.

அவர்களால் ஏன் அந்த பணத்தை தாமாகவே தூய்தாக்கல் செய்ய முடியாது? என ஒருவர் நினைக்கலாம்,

அவர்கள் ஏற்கனவே கறுப்புப்பட்டியலில் இருக்க வேண்டும்.

அவர்களில் சிலருக்கு தாங்களாகவே வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது.

முந்தைய குற்றங்கள் காரணமாக அவர்கள் நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்படுகின்றனர்.

அல்லது அவர்கள் வருமான ஆதாரத்தைக் காட்டத் தவறும்போது கூட அது நிகழும்.

ஒருவேளை அவர்கள் தங்களைத் தாங்களே  இவ்வாறான மோசடிச்செயலில் ஈடுபடுத்த விரும்பாமலும் இருக்கலாம்.

எவ்வாறாயினும், இறுதியாக, காவல்துறை உங்கள் மீதே குற்றம் சுமத்தலாம்.

அப்பாவியான நீங்கள் மோசடிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுடன் பரிவர்த்தனை செய்துள்ளதாக அக்குற்றச்சாட்டு அமையலாம்.

(நினைவில் கொள்ளுங்கள்! இறுதியில் யார் என்றே தெரியாதவர்களுடன் ‘கறுப்புப் பணப் பரிவர்த்தனை’ செய்தவர் நீங்கள் தான்)

எனவே, தயவுசெய்து

‘எப்போதும் தவறான செயல் செய்து அகப்பட்டு விட வேண்டாம்.’

இது நிதித்தூய்தாக்கல்!

ஹிதாவதி