கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 12, 2021

பேஸ்புக் பெருநிறுவனத்தின் நம்பகமான பங்காளராக, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிதாவதிக்கு, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற ‘ஃபெஸ்புக் தென்னாசியா பாதுகாப்பு உச்சி மாநாடு 2019’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்காளர்களும் 2 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உச்சிமாநாட்டில் இணைந்தனர்.

தெற்காசிய நாடுகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் நவநாகரீக பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விவாதிப்பதற்கு, அந்த உச்சிமாநாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் (இந்தியா) ‘நாங்கள் நினைக்கிறோம் டிஜிட்டல்’ இனை ஆரம்பித்து வைத்தார்.  இது இணையவழிப் பாதுகாப்பு தொடர்பான கற்றல் தொகுதிகளை உள்ளடக்கியது.  தென்னாசிய நாடுகளில் உள்நாட்டு வன்முறை ஆனது, சமூகத்தின் ஐம்பது சதவீதமான பகுதியால், ஆதரிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் பரிதாபகரமானது.

பல்வேறு தலைப்புகள் தொடர்பாக சில விளக்கக்காட்சிகள் மற்றும் குழுக் கலந்துரையாடல்கள் அங்கு இடம்பெற்றன.  ஃபேஸ்புக் அவர்களின் கூட்டாண்மை, கொள்கைகள், கருவிகள், வளங்கள் மற்றும் பின்னூட்டங்களைப் பற்றிய விளக்கம், எதிர்காலத்தில் குழந்தைகளின் தவறான படங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க ஒரு திறந்த மூல புகைப்படக் காணொளி பொருந்தும் தொழில்நுட்பம், ‘குழந்தை பாதுகாப்பு ஹேக்கத்தான்’, சம்மதமில்லாமல் பகிரப்பட்ட நெருக்கமான படங்கள் ( அச்சுறுத்தல் / பழிவாங்க), ‘பேசுவோம்’ தற்கொலை தடுப்பு மனநல அடித்தளம், மனித கடத்தல், இன்ஸ்டாகிராமின் புதிய கருவிகள் (நேரத்தை நிர்வகித்தல், தனியுரிமை அமைப்புகள், கருத்து வடிப்பான்களில் தொடர்புகள், தடுப்பதற்கு பதிலாக கட்டுப்பாடு, கருத்து எச்சரிக்கைகள் – தற்போது அமெரிக்காவில் மட்டும், விருப்பங்களை மறைத்தல் மற்றும் அறிக்கையிடல்), ‘ஆராம்ப் இந்தியா’, பாலியல் குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாத்தல், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் நிர்வாண நிலை குறித்து புகாரளித்தல், ‘எதிர் பேச்சு பயிற்சியளிப்பு’ (சி.எஸ்.எஃப்), தி குயர் முஸ்லீம் திட்டம் மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட பெண்களின் சமத்துவம் / டிஜிட்டல் கல்வியறிவை உருவாக்குதல் ஆகியவை அந்த தலைப்புகளில் சிலவாகும். அதில் இலங்கையின் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

சற்றே ஒத்த குறிக்கோள்களுக்காக செயல்படும் பல சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான வளவாளர்களை ஹிதாவதி சந்திப்பதற்கு குறித்த உச்சிமாநாடு வழி வகுத்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

The Summit paved the way for Hithawathi to meet up a lot of resource persons from a number of international organizations that work for the goals of somewhat similar.