கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 11, 2026

இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில் கூட்டமைப்பான FITIS (Federation of Information Technology Industry Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கண்காட்சியான இன்போடெல் 2026 நவம்பர் 06 முதல் 08 வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதில் FOUNDATION.LK > ஹிதவதிக்கான சிறப்பு கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு ஹிதவதி தகவல் கையேடுகள் மற்றும் விளம்பர அட்டைகள் விநியோகிக்கப்பட்டதுடன், மூன்று மொழிகளிலும் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் நவம்பர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இக்கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டனர்.

இக்கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டவர்கள், ஹிதவதி யூடியூப் சேனலை Subscribe செய்தோ அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தை Follow செய்தோ, ‘ஹிதவதி’ சின்னம் பொறிக்கப்பட்ட கீ-டேக்குகள் / பேனாக்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றனர். மேலும், முகநூல் அல்லது ‘டிக்டாக்’ தளங்களில் ஹிதவதியின் இன்போடெல் பதிவைப் பகிர்ந்தோ அல்லது மீள்பதிவு செய்தோ, பயனுள்ள “இணையப் பாதுகாப்பு” (சிங்களம் / தமிழ்) கையேட்டையும் பெற்றுக்கொண்டனர்.

இன்போடெல் 2026 கண்காட்சியில் FOUNDATION.LK > ஹிதவதி அரங்கைப் பார்வையிட வருகை தந்த அனைவருக்கும் நன்றி!