கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 16, 2022

காதலர் தினத்தினை முன்னிட்டு, அலவ்வ மாஸ் ஆடை பூங்கா, தங்களது ஊழியர்களுக்கு “எங்கள் காதல் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு அமர்வை ஏற்பாடு செய்தது. சமூக ஊடகங்கள், சமூக ஊடக தளங்களின் மூலமாக இளம் ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பிலான அறிவை அதிகரிக்கும் முகமான இந்த விழிப்புணர்வு திட்டத்திற்கு எல்.கே டொமைன் பதிவகம் இதற்காக அழைக்கப்பட்டதுடன் இது மனித வள முகாமைத்துவ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாஸ் ஆடை பூங்காவின் உள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, சமூக ஊடகப் பயன்பாட்டின் மோசமான பழக்கவழக்கங்களால் பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பன குறித்து ஊழியர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.