yeheli

Yeheli.lk / Thozhi.lk (யெஹெலி.எல்கே/தோழி.எல்கே)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 23, 2021

இலங்கையில் முதன்முதலில் டிஜிட்டல் தளமான Yeheli.lk / Thozhi.lk, (தோழி.எல்கே) பெண்களின் உடல்நலம் மற்றும் சுகசேமத்தினை உயர்த்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. Yeheli.lk என்பது அநாமதேய, இலவச, மும்மொழி செய்தி தளமாவதுடன் பயனர்களை நிபுணர்களின் ஆலோசனையுடன் இணைக்கும் வலைத்தளம் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளில் கிடைக்கக்கூடிய செயலியாகும். இந்த சேவையானது  இலங்கை இளைஞர்களுக்கு  நிபுணர்களின் ஆலோசனையை அணுகும் வழியை மீண்டும் உருவாக்குகிறது. யெஹெலி டிஜிட்டல் முறையில் விடயத்துடன் தொடர்புபட்ட நிபுணர்களை நுண்ணறிவு செயற்பாட்டு மேடையுடன் பயனர்களின்  வினவல்களுடன் இணைக்கிறது. துஷ்பிரயோகம், பால்நிலை சுகாதாரம் , கருத்தடை சாதனங்கள், உறவு தொடர்பிலான  பிரச்சினைகள், வீட்டு வன்முறை முதலிய  குடும்பத்துடனும்  சகாக்களுடனும்  விவாதிக்க முடியாத  உணர்ச்சிமிக்க  பல்வேறு  விடயங்கள் தொடர்பில் அறியவும் விவாதிக்கவும் இந்த சேவை பாதுகாப்பானதும் நம்பகரமானதுமான  இடத்தை உருவாக்குகிறது.