கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

சங்கா ஒரு வேடிக்கையான அன்பான மனிதராக அறியப்பட்டவர், அவர் தனது ஓய்வு நேரத்தை வழக்கமாக இணையத்தில் செலவிடுபவர். இணையத்தில் உலாவுவதன் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள அவர் விரும்பினார்.

ஒரு நாள் காலையில் சங்கா தனது மின்னஞ்சல்களைச் பார்க்கும்போது சற்று வித்தியாசமான மின்னஞ்சலொன்றைக் கண்டார்.

உண்மையைச் சொல்வதென்றால், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடங்களில் சில உண்மைதான். சங்கா தனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி வெகு காலத்திற்கு முன்பே வயதுவந்த நபர்களுக்கான தளங்களைப் பார்வையிட்டார், அதேநேரம் அவரைப் பற்றிய பாலியல் வீடியோக்கள் எதுவும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

எவ்வாறாயினும், சங்காவால் பயன்படுத்தப்பட்ட சாதனம் உண்மையில் குறித்த நபரால் அணுகப்பட்டு இருந்தால் தனது மேலாடையற்ற புகைப்படங்களைத் திருத்துவதன் மூலம் வீடியோக்களை உருவாக்கி, அதை தனது எல்லா தொடர்புகளுக்கும் அந்த நபர் அனுப்பக்கூடும் என்று சங்கா பயந்தார்.
இதற்கிடையில் அவர் ஹிதவதியின் பேஸ்புக் பக்கத்தை நினைவு படுத்தினார், அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தனது பிரச்சினையை அவர்களிடம் சொல்ல நினைத்தார். சங்காவிடமிருந்து பெற்ற சில விவரங்களைச் சரிபார்த்த பிறகு, இந்த விடயம் ஒரு மோசடி போலத் தென்படுவதாக ஹிதவதி அவருக்கு தெரியப்படுத்தியது. மேலும் அதற்கு பதிலளிப்பதைத் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அவர் தனது மின்னஞ்சல் முகவரியை வழங்குவதையும் அத்தகைய வயதுவந்த தளங்களின் குக்கீஸ்களை ஏற்றுக்கொள்வதையும் நிறுத்துமாறு சங்கா அறிவுறுத்தப்பட்டார். இந்த பிளக் மெயில் தொடர்பில் சங்கா உண்மையிலேயே மேலும் அக்கறை கொண்டிருந்தால், telligp.police.lk வழியாக ஒன்லைன் பொலிஸ் முறைப்பாட்டினை மேற்கொள்ள ஹிதவதி சங்காவை பரிந்துரைத்தது .
ஹிதவதி அணியைத் தொடர்பு கொண்டமை இப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு சங்காவுக்கு போதுமான நம்பிக்கையை ஏற்படுத்தியது, மேலும் அவர் அவர்களுடைய அறிவுறுத்தலின் படி செயல்பட்டார். இறுதியில் அவர் தன்னை விளங்கிக் கொண்டு பாதுகாப்பான பாதையில் வழிநடத்தியதற்கு ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:

  • இந்த வகையான மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும்.
  • வயதுவந்தவர்களுக்கான தளங்களில் பதிவு செய்ய உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த வேண்டாம், இது ஸ்பேமர்கள் / மோசடி செய்பவர்களுக்கு வழங்கப்படக்கூடும் .
  • உங்கள் தரவைப் பயன்படுத்தக்கூடிய குக்கீஸ்களை ஏற்க வேண்டாம்.
  • புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவவும்.
  • இந்த வகையான பிளக்மெயில் / அச்சுறுத்தலுக்கு, நீங்கள் பயந்தால் அல்லது இதற்குப் பின்னால் உண்மையில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்த நபரைத் தண்டிப்பதற்கு (சட்ட நடவடிக்கை எடுக்க) உங்களுக்கு உரிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டும் அல்லது ஒன்லைன் மூலமாக telligp.police.lk க்கு சென்று பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுங்கள் (‘சைபர்-க்ரைம் (cyber-crime)’ என வகையைத் தெரிவு செய்து ஆதாரங்களை இணைக்கவும்).