கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 8, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

இரேஷா ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்ததோடு அருகிலுள்ள சிறிய நிறுவனமொன்றில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். அவரால் தனது இரண்டாவது சம்பளத்திலிருந்த புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்க முடிந்தது அத்தோடு அவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் / வைபர் போன்ற சில சமூக ஊடக பயன்பாடுகளில் சேர மிகவும் ஆர்வமாக இருந்தார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, எல்லாம் சீராக இயங்கின. அவள்  எதிர்கொண்ட ஒரு மோசமான அனுபவம் காரணமாக இரேஷா தனது முகநூல் கணக்கைச் செயலிழக்கச் செய்ய வேண்டி ஏற்பட்டது.

யாரோ அவளது பேஸ்புக் கணக்கிலிருந்து அவளுடைய புகைப்படங்களை எடுத்து அவளுடைய பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஒரு போலி கணக்கை உருவாக்கியுள்ளனர். அவளது உறவினர் ஒருவர் இப்போலிக் கணக்கைப் பார்த்துவிட்டு வந்து அவர் அதை மிகைப்படுத்தி, இரேஷா சொல்வது என்ன என்று கேட்காமலேயே அவளிடம் தெரிவித்திருக்கிறார். இரேஷா இயல்பாகவே சமூகமயமான நபர் அல்ல, சமூக ஊடக நடத்தைகள் பற்றி அவள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இச் சம்பவம் அவளை மிகுந்த குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. அவளுடன் வேலை செய்யும் நண்பர்களும் அவளை எதிர்மறையான பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் மிகவும் சங்கடமாக இருந்தாள்.

ஏன் என்றால்? அவளது  பேஸ்புக் கணக்கின் பாதுகாப்பு அமைப்புகளை சரியாக  கட்டமைக்கவில்லை, இதுபோன்ற சம்பவங்கள் பற்றி அவள் முன்பு அறிந்திருக்கவில்லை.

இவ் அனைத்து நிகழ்வுகளாலும் அவள் மனச்சோர்வடைந்தாள். மேலும், அவள் தற்கொலை செய்ய நினைத்தாள். அவளால் சரியாகச் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. அவளால் அலுவலகப் பணிகள் கூட சரியாக நிறைவேற்ற முடியவில்லை. அவள் “வேறொரு உலகத்தில் வாழ்வது போல்” வசித்து வந்தாள். அவளின் நடத்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை அவளுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கவனித்தார். இதற்கான ​உதவிகளைப் பெற ஹிதவதியை தொடர்பு கொள்ளுமாறு  அவர் இரேஷாவை அறிவுறுத்தியுள்ளார்.

இரேஷா ஹிதாவதியையும் அழைப்பு ஏற்படுத்தவும் விரும்பவில்லை. ஓரிரு நாட்களுக்குப் பிறகு, அவள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு முயற்சி செய்து பார்க்க வேண்டுமென நினைத்தாள். அவளுடைய முழு கதையையும் விளக்கி முடிக்க சுமார் 30-40 நிமிடங்கள் ஆனது, ஹிதாவதி அக்கதையைப் பொறுமையாகக் கேட்டது. இது மிகவும் சிறிய சம்பவமாக (தொழில்நுட்ப ரீதியாக) இருந்தபோதிலும், அந்த நேரத்தில் அவள் ஒரு நல்ல மன நிலையில் இருக்கவில்லை. எனவே உடனடி நடவடிக்கையாக, குறித்த போலிக் கணக்கினை நாங்கள் புகாரளித்ததன் ஊடாக அக்கணக்கினை அகற்ற முடிந்தது.

அவளை இயல்பு நிலைக்கு திருப்பி அமைதிப்படுத்தி, அவளுக்கு தேவையான தெளிவினை வழங்க மற்றும் மனதை நிதானப்படுத்துவதற்காக 1926க்கு அழைப்பை மேற்கொள்ளும் படி இரெஷா​வே நாங்கள் வழிநடத்தினோம். நாங்கள் இரேஷாவை மற்றும் 1926 அதிகாரிகள் என்று இரு தரப்பினரையும் தொடர்பு கொண்டோம். பல நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு,  இரேஷாவினால் தனது இயல்பான நடவடிக்கைகளைத் தொடர முடிந்தது.

அவள் இப்போது முன்பைவிட  வலிமையாக அவளுடைய வழக்கமான தினசரி நடவடிக்கைகளைச் செய்து வருகிறாள். அவள் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாள். அவள் தன் உயிரைக் காப்பாற்றியமைக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஹிதவதியை அழைத்தாள். ஹிதாவதியின் உதவியால் தான் இப்போது தன்னால் சிறப்பாகச் செயல்பட முடிகின்றது என்றும் அவள் கூறினாள்.

 

முன்னெச்சரிக்கை குறிப்புகள்: