கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 25, 2022

ஃபேக்டரி ரீசெட் செய்வது என்றால் என்ன?

இலத்திரனவியல் சாதனத்தின் ஃபேக்டரி ரீசெட் (ஹார்ட் ரீசெட், கணினி வன்பொருள் /ஹார்ட்வெயார் ரீசெட் அல்லது மாஸ்டர் ரீசெட் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது, ஒரு சாதனத்திலிருந்து எல்லா தரவுகளும் அகற்றப்பட்டு, அதை அதன் அசல் நிலைக்குத் திரும்பக் கொண்டுவருவது, வேறுவிதமாகக் கூறினால், அது முதலில் வாங்கப்பட்டபோது எப்படியிருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு வருவதாகும்.

ஃபேக்டரி ரீசெட் செய்வதன் மூலமாக எந்த வகையான தரவுகள் அகற்றப்படும்?

 •  தொடர்புகள்
 • புகைப்படங்கள் / காணொளிகள்
 • பயன்பாடுகள்/ஆப்ஸ்
 • பதுக்ககம்
 • இலத்திரனவியல் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்தும்

ஃபேக்டரி ரீசெட் செய்வதன் மூலமாக எது அகற்றப்படாது?

 • குறிப்பிட்ட சாதனத்தின் இயக்க முறைமை (IOS, Android, Windows போன்றவை)

ஃபேக்டரி ரீசெட் செய்வதன் நன்மைகள் என்ன?

 1. நீங்கள் சாதனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டால், சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் அகற்ற வேண்டியிருக்கும் போது
 2. பழுதடைந்த சாதனத்தை திருத்தியமைக்கும் போது
 3. நீக்க கடினமாக இருக்கும் வைரஸ்கள் அல்லது கோப்புகள் போன்ற தீம்பொருள்களை அகற்றுவதற்கு
 4. நினைவக இடத்தை தெளிவாக்க
 5. அதன் இயல்புநிலை அமைப்புகளுக்கு சாதனத்தை மீட்டமைத்தல்
 6. சாதனங்கள் முடக்கம் போன்ற செயல்திறன் சிக்கல்களை சரிசெய்தல்

நன்மைகளுக்கு அப்பால், ஃபேக்டரி ரீசெட் செய்வது மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணியாக இருக்கிறது, ஏனெனில் இது உங்களுக்குத் தேவைப்படும் எல்லா தரவுகளையுமே அழித்துவிடும், மேலும் இது ஒவ்வொரு சாதனத்திற்கும் பொருத்தமான தீர்வாக இருக்காது. மறுபுறம், ஃபேக்டரி ரீசெட் செய்வதற்கு முன் உங்கள் தரவை காப்புநகல் எடுக்கவோ அல்லது என்க்ரிப்ட் (மறைகுறியாக்க) செய்யவோ (Android இல்) பரிந்துரைக்கப்படுகிறது.

மூலம் : https://www.thejournal.ie/factory-reset-device-1775280-Nov2014/
https://www.techopedia.com/definition/17154/factory-reset

பல்வேறு சாதனங்களில் ஃபேக்டரி ரீசெட் செய்வது எவ்வாறு என்பதை பற்றி எங்கள் அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.