கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 17, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

பெருந்தொற்றின் காரணமாக இந்நாட்களில் நிதிசார் சிக்கல்களும் கஷ்ட காலங்களும் எல்லோருக்கும் பொதுவாகவே காணப்படுகின்றது. ஹெஷானிக்கும் அவ்வாறே. பணத்தை ஈட்ட பல்வேறு வழிகளிலும் முனைந்தாலும் எதுவும் சரியாக அமையவில்லை.

இரவு பகலாக இதனையே நினைத்துக்கொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டிற்கு சிறிய வேலைக்கு செல்ல எண்ணிணாலும் அதற்கும் பெருந்தொகையான பணம் தேவைப்பட்டது. ஒருநாள் பேஸ்புக்கில் உசாவிக்கொண்டிருந்த பொழுது, ஒரு விளம்பரம் அவளை பெரிதாக ஈர்த்தது.

“இந்நாட்களில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றீர்களா? உங்கள் குடும்ப வருமானத்தை அதிகரித்து அவர்களிற்கு உதவ எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் எங்களை தொடர்புகொள்ள தயங்காதீர்கள்”

வேறு சிந்தனைகளிற்கே இடமின்றி, அவர் அதற்கு செல்ல முடிவெடுத்தார். எனவே விளம்பரதாரரையும் தொடர்புகொண்டார்.

ஹெஷானி: வணக்கம், நீங்கள் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த விளம்பரம் தொடர்பிலானது? விளம்பரதாரர்: ஓ… ஆம். நேரடியாகவே விடயத்திற்கு வருவோம். உங்களது வேலை இதுதான். ஒன்றும் பெரிய விடயமில்லை. உங்களிற்கே இந்த வேலை பிடித்து போகும். அதாவது இயற்கையான வளைவுகளுடன் கூடிய சில கவர்ச்சியான படங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.ஆசிய பெண்களது உடலமைப்பை விரும்பும் மேற்கத்தேய சந்தைகளுடன் எங்களிற்கு தொடர்பு உள்ளது. நான் சொல்வது உங்களிற்கு புரியும் என நினைக்கிறேன்…
ஹெஷானி: ம்ம்ம்ம்ம்ம்ம…. ஆனால் நீங்கள் வேலைக்காகத் தான் விளம்பரம் கொடுத்திருந்தீர்கள் என நினைத்தேன்.
விளம்பரதாரர்: ஆமாம். இதுதான் வேலை. உங்களால் நன்றாகவே சம்பாதிக்க முடியும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நல்ல விலையை நாங்களே தருவோம். நன்றாக யோசித்து முடிவெடுத்தபின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அதிக காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் ஏராளமான பெண்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஹெஷானி:இதனை பற்றி நான் யோசிக்க வேண்டும்.

ஹெஷானிக்கு சிறிது அச்சமாகவே இருந்தது. இது சரியல்ல என அவளுக்கு தெரிந்தாலும் ஒவ்வொரு நாளும் கஷடங்கள் அதிகரித்துக்கொண்டு வர அவளுக்கு வேறு வழியும் இல்லாமல் போனது. இதற்கு மேலும் யாரிலும் தங்கியிருக்க இருக்க அவள் விரும்பவில்லை.

எனவே அவர் அவனை தொடர்பு கொண்டதுடன் அவன் கேட்டவாறே சில அந்தரங்கமான புகைப்படங்களையும் அனுப்பினார். அவரது வங்கி விபரங்களை பெற்றுக்கொண்ட அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் வாராவாரம் அவளது கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் என கூறினர்.

நாட்கள் கடந்தாலும், அவளது கணக்கிற்கு எந்தவொரு பணமும் வைப்பிலிடப்படவில்லை. அவரிற்கு நம்பிக்கை அற்றுப்போயிருந்தது. அந்த நபரிடமிருந்து ஒரு நாள் அவரிற்கு ஒரு செய்தி வந்தது. அவன் பணம் தான் அனுப்பியிருக்கின்றான் என சந்தோஷத்துடன் அதனை திறந்து பார்த்தவளிற்கு அதிலிருந்தது அதிர்ச்சியையே அளித்தது.

விளம்பரதாரர்: உங்களுடைய படங்களை வயதுவந்தோரிற்கான இணையத்தளங்களிற்கு அனுப்பி எங்கும் பரப்ப உள்ளோம். உன்னால் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியாது. ஆனால் உடனடியாக எங்களிற்கு 100,000/- ரூபாய் பணம் அனுப்பினால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அச்சம் கொண்டு, மன அழுத்தத்திற்கு உள்ளான ஹெஷானிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்விட்டார். பேஸ்புக்கில் கண்ட ஹிதாவதியை மனதிற்கொண்டு உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டார்.

ஹிதாவதி அவளை தைரியமாக இருக்க கேட்டுக்கொண்டதுடன் வுமன் இன் நீட் (Women in Need) எனும் அமைப்பை சட்ட உதவிக்காக நாடுமாறு கூறினார். அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரில் விளம்பரதாரரது கணக்கு தொடர்பில் முறையிட ஹிதாவதியை மீளவும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது மனநிலையை மேலும வலுப்படுத்த அவர் சுமித்ராயோவிற்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்:

  • சமூக வலைத்தளங்களில் விரைவான பண வருவாய் குறித்து வெளியாகும் ஏறத்தாழ அனைத்து விளம்பரங்களுமே ஏமாற்று அல்லது சட்டவிரோதமானதாகவே காணப்படும். எனவே இது குறித்து மிகக் கவனமாக இருக்கவும்.
  • அதனை மீளப்பெறுவது என்பது நீண்ட செயன்முறை என்பதனால் அவற்றை யாருடனும் ஒரு போதும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்
  • இணையத்தளங்களில் உங்களை இழிவுபடுத்தும் வகையில் பரப்பப்பட்ட புகைப்படங்கள் அல்லது ஒளிநாடாக்களை மீளப்பெறவும் முறையிடவும் ஹிதாவதியை தொடர்புகொள்ளவும்.
  • வுமன் இன் நீட் (Women in Need) இடமிருந்து எந்தவிதமான அச்சுறுத்தலிற்கும் எதிரான இலவச சட்ட ஆலோசனையையும் மனவள ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • இம்மாதிரியான சம்பவங்களினால் தங்களது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் சுமித்திராயோவை தொடர்புகொள்ளுங்கள்.