கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 29, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

கடந்த ஆண்டு இறுதியில் பொருளாதார ரீதியாக மிஷா சிரமப்பட்டுக் கொண்டிருந்தார், இதன் காரணமாக் நல்ல விலைக்கு தனது தொலைபேசியை வீதியில் உள்ள சிறிய தொலைபேசி கடைக்கு விற்பனை செய்தார் இதன் பின்னர் ஒரு மாத காலத்திற்குப் பிறகு, அவருக்கு தொலைபேசி சாவடி ஒன்றிலிருந்து அழைப்போன்று வந்தது, அந்த உரையாடல்,

அழைத்தவர் : ஹலோ மை டியர் , நீங்கள் நல்லா இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!
மிஷா: யார் இது?
அழைத்தவர்: உங்களுக்கு என்னை தெரியாது நான் யார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள் ..
நான் சொல்வதை மட்டும் கவனமாகக் கேளுங்கள்?
போன மாதம் உங்கள் தொலைபேசியை விற்றீர்களா?
மிஷா: ஆமாம் .. (ஆச்சரியமாக) உங்களுக்கு அது எப்படி தெரியும்?
அழைப்பாளர்: டார்லிங் நான் அதை வாங்கினேன் அதிலிருந்து உங்கள் நிர்வாண மற்றும் காதல் படங்களில் சிலவற்றை என்னால் மீட்டெடுக்க முடிந்தது.
மிஷா: என்ன ??
அழைப்பாளர்: இது என் கைகளுக்கு வந்ததில் மகிழ்ச்சி இன்னும் மூன்று நாட்களுக்குள் ரூபா 100,000 / – பணத்தை நீங்கள் ஏற்பாடு செய்தால்,ரகசியங்கள் எல்லாவற்றையும் அழிக்க அல்லது உங்கள் முன்பாக தொலைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (factory resetting) என்னால் முடியும் . ஆனால் நீங்கள் அதற்கு ஒத்துக்கொள்ள தவறினால், விசயங்களை சிக்கலாக்கும் திட்டங்கள் என்னிடம் உள்ளன. எனவே நீங்கள் முடிவு செய்யுங்கள்! (அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார் )
விரைவில் உங்களிடம் திரும்பவும் பேசுகிறேன் (இணைப்பு துண்டிக்கப்படுகிறது )

தொலைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவராமல்   (factory resetting)  அதனை  விற்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை  இப்போதாவது மிஷா புரிந்து கொண்டார், ஆனால் காலம்கடந்த நிலையில் இப்போது இதனால் எந்தவித பலனும் கிடையாது .

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
உங்கள் தொலைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவராமல் (factory resetting) எவரிடமும் அதனை விற்கவோ கொடுக்கவோ வேண்டாம் (குறைந்தது இரண்டு மூன்று முறையாவது செய்யுங்கள்). பிளாக் மெயில் செய்தால் உரிய பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள், அவர்களால் மீண்டும் மீண்டும் பிளாக்மெயில் செய்ய முடியும் என்பதால் அவர்களிடம் பணத்தை கொடுக்க வேண்டாம்.