கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 10, 2021

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையாகும்

முடக்கக் காலப்பகுதியில் அதுவொரு திங்கட்கிழமை. ஹிதாவதியானது தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் பெண்னொருவரிடமிருந்து (சாலிகா) அழைப்பொன்றை பெற்றது. தொற்றுநோய் காலப்பகுதியில், அவள் வீட்டிலிருந்தே தனது பணியை மேற்கொள்கின்றாள். அவளது கணவரும் வீட்டிலிருந்தே தனது தொழிலை மேற்கொள்கின்றார். இதேவேளை சாலிகா கொடூரமானவொரு சூழ்நிலையை, குறிப்பாக அவளது பெயரில் ஒரு முகப்புத்தக நண்பர் வேண்டுகோளொன்றை அவளது கணவர் பெற்ற போது எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவ்வேண்டுகோளை பெற்ற போது குறித்த ஃப்ரப்பைலை (Profile) உடனடியாக சரிபார்த்து அதிலுள்ள பெயர் மற்றும் புகைப்படங்கள் அவளுடையதென கண்டறிந்தார். பின்னர் குறித்த அந்த ஃப்ரப்பைல் (Profile) அவரது மனைவிக்கு சொந்தமானது தான் என்ற அனுமானத்தில் அவளது நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

இரண்டு நாட்களின் பின்னர், இந்த முகப்புத்தக கணக்கிலிருந்து அவன் வழக்கத்துக்கு மாறான அரட்டைகள் மற்றும் செய்திகளை பெற்றார். அவளது தகாத முறையிலான புகைப்படங்களை அவர் பெற்ற போது நிலைமை மிகவும் மோசமானது. அவர் அந்த புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்த போது மிகவும் கோபமடைந்தார். அவர் அவளிடம் சத்தமிட ஆரம்பித்ததுடன் அது தொடர்ச்சியான விவாதத்தை இருவரிடையும் ஏற்படுத்தியது. மேலும், அவர் மனைவியின் பக்கத்திலுள்ள விடயங்களை ஆராயாது ஒவ்வொரு நாளும் அவளை தாக்கத் தொடங்கினார்.

சாலிகா இவ்வாறான செயலை ஒரு போதும் மேற்கொள்ளவில்லை என்பது அவளுக்கென ஒரு முகப்புத்தக கணக்கொன்றை இதுவரை அவள் உருவாக்கவில்லை என்பதிலிருந்து தெளிவாகின்றது. அதுவொரு போலிக் கணக்கு என்பதை அவள் உணர்ந்தாள்.

அவள் உடலளவிலும் மனதளவிலும் குறித்த போலிக் கணக்கினால் தான் இளைக்காத குற்றத்திற்காக தன் கணவரினால் துன்புறுத்தப்பட்டாள்.

அவள் குறித்த போலிக் கணக்கைப் பற்றி புகார் செய்ய முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

தனக்கு இணையத்தில் உதவி ஏதும் கிடைக்குமா என அவள் தேடும் போது ஹிதாவதி வலைத்தளத்தை பார்வையிட்டாள்.

சாலிகா ஹிதாவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவளது கதையை கூறினாள். அவள் ஹிதாவதியிடமிருந்து தேவையான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை பெற்றுக் கொண்டாள். அவள் அந்த வழிமுறைகளை பின்பற்றி குறித்த போலிக் கணக்கை அகற்றினாள். அவள் இறுதியில் தனது குடும்ப வாழ்க்கையையே பாதித்த மிகப்பெரிய தலைவலியாகவிருந்த சிக்கலிருந்து மீண்டெழுந்ததை எண்ணி மிகவும் ஆனந்தமடைந்தாள்.

அவளது கணவர் இணைத்தளத்தில் நடைபெறும் மோசடிகள் பற்றி விழிப்புணர்வற்றிருந்தார். அதனால் தனது கணவர் அவளுடன் விவாதிக்கும் பொழுது சாலிகா, “உங்களுக்கு மேலதிக தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் ஹிதாவதியை தொடர்புக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு விளக்கமளிப்பார்கள். இச்சேவைக்கு கட்டணங்கள் அறவிடப்படாது – தயவு செய்து அவர்களுக்கு ஒரு அழைப்பை ஏற்படுத்துங்கள்’’ என கூறினாள்.

அதற்கடுத்த நாளே சாலிகாவின் கணவர் ஹிதாவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி முகப்புத்தகத்தில் தனது மனைவியின் பிரச்சனை தொடர்பான தகவல்களை வினவினார். அவன் சைபர் மோசடிகள் குறிப்பாக சமூக ஊடகத்தில் நடைபெறுகின்றவை பற்றி அறிந்திருந்தார். அவனது அனைத்து சந்தேகங்கள் மற்றும் உறுதித்தன்மை பற்றி தெளிவடைய எண்ணினார். அவனும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமென தாழ்மையாக கேட்டுக்கொண்டார்.

ஹிதாவதியானது இந்த தம்பதியை ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கைக் கொண்டு சந்தோசமாக வாழுங்களென ஆலோசனை வழங்கியது.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

  • இனந்தெரியாத நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது சிறப்பானதாகும்.
  • தாங்கள் பொதுவாக பகிரும் புகைப்படங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு தீங்கிளைக்கா வண்ணம் அமைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (உ+ம் ஒரு போலிக் கணக்கை உருவாக்குவதற்கு, எதிரிகளினால் முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு
  • தங்களது விருப்பின்றி (புகைப்படங்கள், காணொளிகள், மற்றும் பல வெளியிடப்படுமாகவிருந்தால் அதனை அறிக்கையிட முடியும். தேவையேற்படின், ஹிதாவதியைத் தொடர்புக் கொள்ளவும்.
  • இவ்வாறான சூழ்நிலைகளில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக உணர்ந்தால், இலவசமாக சட்ட அறிவுரை மற்றும் ஆலோசனையை பெற விமென் இன் நீட் Women In Need (WIN) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.
  • மேலதிய தகவல்களை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ள முடியும். https://www.hithawathi.lk/how-to-get-help/useful-contact-information/
  • இவ்வாறான சுழ்நிலைகளில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக உணர்ந்தால், சட்ட ரீதியான உதவிக்கு ஆதரவிற்கு 1938 பெண்கள் உதவிமையம் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சை தொடர்புக்கொள்ளுங்கள். 1938 (Women Helpline – Ministry of Women & Child Affairs)
  • இவ்வகையான சந்தர்ப்பங்களில் தாங்கள் தாழ்வாக உணரும் போது 1926 (விசேட மனநிலை ஆரோக்கிய துரித எண் – 1926 (Special Mental Health Hotline) அல்லது சுமித்திரயோ (Sumithrayo) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.