கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

கௌஷிக்கு 21 வயது, அவள் பாடசாலை படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தாள், அவளுடைய தாய் முகம்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடியே வேலை தேடுவதற்கு காரணமாக இருந்தது. கௌஷியும் அவளுடைய அம்மாவும் பணம் இன்மை காரணமாக நிறையச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் அவள் முயற்சித்த எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கௌஷியின் தாய் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அவர்கள் இலங்கையில் உள்ள ஒரு முகவரைச் சந்திக்கிறார்கள், ஒரு வேலையைத் தேட உதவுவதாக உறுதியளித்த அந்த முகவர் அவர்களிடமிருந்து ரூ. 100,000/- பணம் பெறுகிறார். கௌஷிக்கும் அவள் அம்மாவுக்கும் விரைவில் வேலை கிடைக்கும் என்றும் அது அவர்களின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்றும் அவர் உறுதியளிக்கிறார். முகவருக்குச் செலுத்திய தொகையைத் தேடுவது கௌஷியின் தாய்க்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. பணத்தை விரைவில் திருப்பித் தருவதாக உறுதியளித்து தனது உறவினரிடம் கடன் வாங்கினார்.

பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) மூலம் அவர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும் என்று அந்த முகவர் இவர்களிடம் கூறினார் கௌஷியின் தாய்க்கு பேஸ்புக் கணக்கு இல்லாத காரணத்தினால் கௌஷியின் பேஸ்புக் விவரங்களைஅவரிடம் கொடுக்க முடிவு செய்தனர்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கௌஷிக்கும் இந்த முகவரிடமிருந்துசெய்திகள் வர ஆரம்பித்தன

தொடர்புடைய முகவர்: ஹாய் கௌஷி, உங்களுக்கு என்னிடம் ஒரு நல்ல செய்தி உள்ளது.

கௌஷி: ஹாய், அம்மாவுக்கு வேலை கிடைச்சுதா?

முகவர்: ஆம், அம்மா விரைவில் பஹ்ரைன் செல்ல வேண்டும்

கௌஷி: எங்களுக்கு உதவியதற்கு நன்றி. நீங்கள் மிகவும் நல்ல மனிதர்

அவ்வாறே, அரட்டைகள் தொடர்ந்தன, மேலும் முகவரால் கௌஷியின் மனதை வெல்ல முடிந்தது

பல மாதங்களுக்குப் பிறகு….

முகவர் கௌஷியுடன்  இருந்த அனைத்து தொடர்புகளையும் நிறுத்துகிறார். அவளுடைய தாயின் வேலையும் தாமதமாகியது, , வெளிநாடு செல்வதற்காகப் பணம் கொடுத்த உறவினர் கடனை திருப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறார். இந்தச் சிக்கல்கள் காரணமாக, கௌஷி மெசஞ்சரில் முகவரைத் தொடர்பு கொள்ள முயல்கிறார், மேலும் முகவர் பதிலளிக்கிறார். இப்போது அவரது தொனி வேறு விதமாக இருக்கிறது.

கௌஷி: ஆனது? எங்களுக்கு நிறைய பணப் பிரச்சினைகள் இருக்கிறது….

முகவர்: உங்கள் பணப் பிரச்சினைகளுக்கு நான் என்ன செய்ய முடியும்?

கௌஷி: என் அம்மாவுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து எங்களிடம் பணம் வாங்கினாய்

முகவர்: எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. வேலை தேடுவது அவ்வளவு எளிதல்ல. எடுத்த பணத்தைத் திருப்பி தருகிறேன்

கௌஷி: எப்போது பணம் தருவீங்க?

முகவர்: நான் பணத்தைத் திருப்பித் தருகிறேன், ஆனால் நீ வீடியோ கால் (Video call) எடுத்து உன் ஆடைகளைக் கழற்ற வேண்டும். என்ன சொல்கிறாய்?

கௌஷி அதிர்ச்சியடைந்து தொலைப்பேசியை ஒரு ஓரமாக வைத்தாள்.

நாட்கள் செல்ல செல்ல கௌஷயின் பணப்பிரச்சினைகள் அதிகமாகின்றன. இது அவளுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது, அதனால் அவள் முகவரின் ஆலோசனையைப் பற்றி யோசிக்கிறாள்.

அன்று இரவு அம்மாவிடம் எதுவும் சொல்லாமல், முகவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவன் கேட்டதைச் செய்கிறாள்

கௌஷியின் அழைப்பின் போது மறுமுனையிலிருந்த தொடர்புடைய முகவர் அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட் செய்துள்ளார்.

கௌஷி அவனிடம் பணத்தைத் திருப்பி தருமாறு கேட்கிறாள் ஆனால் ……..

அந்த முகவர், பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறிவிட்டு, கௌஷியின் நிர்வாணப் படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார்.

திகிலடைந்த கௌஷி, மேலும் பயந்து, உதவியற்றவளாகிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாணப் படங்களைப் பற்றி யோசித்து மனமுடைந்து போகிறாள். இந்த கடினமான கால கட்டத்தில், கௌஷி ஹிதவதியைப் பற்றி அறிந்துகொண்டு, ஹிதவதியின் ஹாட்லைன் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.

கௌஷி மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொண்ட ஹிதவதி அவளுக்கு மனநல உதவிக்காக 1926க்கு (சிறப்பு மனநல சுகாதார அழைப்பு இலக்கம்) அனுப்புகிறார். மேலும் ஹிதவதி அந்த முகவரின் கணக்கைப் புகாரளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார். மேலும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலம் CID சமூக ஊடகப் பிரிவுக்குப் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அந்தரங்க படங்கள் அல்லது வீடியோக்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர வேண்டாம்.
  • இதுபோன்ற சம்பவங்களால் நீங்கள் மனச்சோர்வடைந்தால் 1926 (சிறப்பு மனநல சுகாதார அழைப்பு இலக்கம்) அல்லது சுமித்ராயோவைத் தொடர்பு கொள்ளவும்.
  • சைபர்-குற்றவாளிகள் தொடர்பாக புகார் இருந்தால், அதற்குரிய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் -ஸ்கிரீன்ஷாட் போன்றவை) தெளிவாகக் குறிப்பிட்டு, அவற்றை CID-யிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபால் மூலமாக “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.ccid@police.gov.lk மூலம் மின்னஞ்சல் ஊடாகவோ முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.
  • உங்கள் படங்கள்/வீடியோக்கள் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேறு ஏதேனும் உள்ளடக்கம் வெளியிடப்பட்டால், அதைப் புகாரளிப்பதற்கும் அகற்றுவதற்கும் தேவைப்பட்டால் உதவிக்கு ஹிதவதியைத் தொடர்புகொள்ளவும்.