கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 29, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

புதிய உள்நுழைவு அமைப்பொன்றில் பேஸ்புக் கணக்கைப் புதுப்பிப்பதற்கான இணைப்பாக பின்வரும் செய்தியை ரெனால்ட் பெற்றார்

அதற்கேற்ப அவர் இணைப்பைக் கிளிக் செய்து, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டார், ஆனால் தவறு  காரணமாக அவரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை . அவரால்  தனது பேஸ்புக் கணக்கில் கூட உள்நுழைய முடியவில்லை.

அதன் பின்னர் அவரது  பேஸ்புக் கணக்கு ஹக் செய்யப்பட்டதாகவும், அவர் கணக்கைத் திரும்பப் பெற விரும்பினால் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்துக்கு  100 டொலர்களை  மாற்ற வேண்டும் என்றும், அப்படி செய்யாவிடின்  அவரது பெயருக்கு மோசமான விம்பத்தை ஏற்படுத்தப்படும் எனவும் மிரட்டி  மின்னஞ்சல் ஒன்று  வந்தது.

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.