கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

ரய்னி தனது மேற்படிப்பை மேற்கொள்ளும் போது புத்தகப் பிரியராகவும் பிரகாசமான மாணவியாகவும் இருந்தார். இதனால் சில மாணவர்களுக்கு அவர் மீது பொறாமை ஏற்பட்டது.

ஒருமுறை ஃபேஸ்புக்கில் அவளைக் கொடுமைப்படுத்தும் (புலியிங்) நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இடுகையைக்/பதிவைக் (போஸ்ட்) கண்டார்.

“சலிப்பூட்டும் மாணவர் வாழ்க்கை

என்ற தலைப்புடன் அவரது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து திருடப்பட்ட அவர் புகைப்படங்களில் ஒன்றைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டிருந்தது.

ரய்னி ஒரு அப்பாவியாக இருந்தாலும், இம்முறை அவள் பொறுமை இழந்தாள். அப் பதிவை உடனடியாக அகற்றுமாறும் அல்லது பொலிஸ் நிலையத்தில் சந்திக்க தயாராகும்படியும் அவள் அந்தப் பதிவை வெளியிட்ட நபரை மிரட்டியுள்ளார்.

சில மணி நேரங்கள் கழித்து, அவளுடைய தோழி ஒருவர் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, அவளுடைய புகைப்படத்துடன் கூடிய பதிவு இப்போது தெரியவில்லை என்றும், அது அகற்றப்பட்டிருக்கும் என்பதையும் உறுதி செய்தார். எதிர்காலத்தில் இது வேறு வழிகளில் நிகழலாம் என்பதால் கவனமாக இருக்குமாறும் அவளது தோழி அவளிடம் கூறி மேலும் சில ஆலோசனைகளைப் பெற ஹிதவதியின் தொடர்பு விவரங்களைக் கொடுத்துள்ளார்.

கொடுத்த எண்ணை டயல் செய்வதைத் தவிர ரய்னிக்கு வேறு வழியில்லை. அவர் நடந்ததை விளக்கினாள்;

ரய்னி: எனக்குத் தெரியாது, எனக்கு பயமாக இருக்கிறது.. நாங்கள் ஒரே கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களில் சிலர் எனது நண்பர்கள் பட்டியலிலும் உள்ளனர். அவர்கள் எனது ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்து என் வாழ்க்கையை குழப்பவும் கூட முயற்சி செய்யலாம்.
ஹிதவதி: நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது ரய்னி.. இப்போது பதிவு அகற்றப்பட்டதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகள் உள்ளன.
#1: உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்களை மட்டும் உங்கள் நன்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளவும்.
#2: உங்களைப் புண்படுத்தும்/கொடுமைப்படுத்தக்கூடியவர்கள் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தடுத்து (பிலொக்)/நட்பை நீக்கவும்.
#3: உங்கள் தனிப்பட்ட விவரங்கள்/புகைப்படங்களை தனிப்பட்டதாக (Private) அல்லது நண்பர்களுக்கு மட்டும் (Friends Only) பார்க்கும்படி செய்யுங்கள். மேலும், உங்கள் சமூக ஊடக கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை (பிரய்வசி செட்டிங்ஸ்) இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
#4: உங்கள் புகைப்படங்கள்/வீடியோக்கள் பதிவிடப்பட்டால் அதை அறிவிப்பதற்காக, அமைப்புகள் (செட்டிங்ஸ்) மூலம் ‘முகத்தை அடையாளம் காணுதல்’ Facebook ‘Face Recognition’ ஐ இயக்கவும்.
#5: யாரும் யூகிக்க முடியாதபடி உங்கள் கடவுச்சொற்களை வலுப்படுத்தவும்
#6: சாத்தியமான இடங்களில், அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க (ஹேக்கிங்) இரு காரணி அங்கீகாரத்தை (டு ஃபேக்டர் ஒதன்டிகேஷன்/ 2FA) இயக்கவும்.
#7: AVG, Kaspersky, Avast, Avira போன்ற இலவச இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உங்கள் மொபைலில் நிறுவி, தொடர்ந்து ஸ்கேன் செய்ய அமைக்கவும். இது பாதுகாப்பற்ற / ஃபிஷிங் தளங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கும்.
#8: எதுவாக இருந்தாலும் நீங்கள் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்; உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
#9: இணையத்தகவல் ஊடுவெளியில் (சைபர்ஸ்பேஸில்) பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு ஹிதவதி இணையதளத்தைப் பார்வையிடவும்.

டு ஃபேக்டர் ஒதன்டிகேஷன் (2FA) மற்றும் ஃபேஸ் ரெகக்னிஷன் (முகத்தை அடையாளம் காணுதல்) போன்ற சில உதவிக்குறிப்புகளைப் பற்றி அன்று தான் அவள் முதல்முறையாக அறிந்து கொண்டாள். ரய்னி அந்த ஆலோசனையைப் பின்பற்றுவதாக மகிழ்ச்சியுடன் உறுதியளித்தார், மேலும் தன்னம்பிக்கையைத் தந்ததற்காக ஹிதவதியிற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

    • சில நேரங்களில் நீங்கள் இணையத்தகவல் ஊடுவெளியில் (சைபர்ஸ்பேஸில்) துன்புறுத்தப்படலாம். இது உங்கள் தவறு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதிலிருந்து விடுபட வழிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் மனதை வலுவாக வைத்திருக்க வேண்டும். காரணம், அவர்கள் தங்கள் பதிவுகள் / கருத்துகளின் எதிர்மறையான தாக்கத்தைப் பற்றியோ அல்லது அவற்றைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றியோ அவர்கள் நினைக்கவே மாட்டார்கள்.
    • இத்தகைய சிக்கல்களைத் தடுக்க/குறைக்க, மேலே குறிப்பிட்டுள்ள (# 1 முதல் # 9 வரை) பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் உதவிக்கு ஹிதவதியைத் தொடர்பு கொள்ளவும்.
    • பெரும்பாலான சமூக ஊடகத் தளங்கள் வெறுப்புப் பேச்சு, கொடுமைப்படுத்துதல், நிர்வாணம் மற்றும் நெறிமுறையற்ற விடயங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில்லை, எனவே அது போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டால், அதைப் எப்போதும் முறைப்பாடு செய்யலாம் .
    • இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்ய (சட்ட நடவடிக்கை எடுக்க), குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தை (தொலைபேசி எண்: 011 244 4444) தொடர்பு கொள்ளவும்.
    • இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அந்த நபரை தண்டிக்க வேண்டுமானால் (சட்ட நடவடிக்கை எடுக்க) நீங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும் அல்லது telligp.police.lk என்ற இணையதளத்தின் வழியாக ஒன்லைனில்​ முறைப்பாடு அளிக்க வேண்டும். (‘சைபர் கிரைம்’ (cyber crime) வகையைத் தேர்ந்தெடுத்து, தொடர்புடைய ஆதாரங்களை இணைக்கவும்)
    • மேலும், தொடர்புடைய ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட இணையக் குற்றவியல் முறைப்பாடுகள் (சரியான இணைப்புகள், தேதி/நேரத்துடன் கூடிய திரைக்காட்சிகள் போன்றவை) CIDயிடம் ஒப்படைக்கப்படலாம். மாற்றாக, “இயக்குனர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாகவோ அல்லது dir.cid@police.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.