கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை

விடுமுறை நாளொன்றில் அதிகாலையில் ஜேசன் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து பின்வரும் மின்னஞ்சலைப் பெற்றார்,

வணக்கம் சகோ , இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன். ஆனால் இப்போது உங்களிடமிருந்து எனக்கு மிகப் பெரிய உதவி தேவை. எனது பணம் முழுவதும் விமான நிலைய கழிவறையில் எனது பயணப் பையுடனும் தொலைந்து விட்டது, எனது பணம், கிரெடிட் கார்டுகள், தொலைபேசி அனைத்தும் அதில் இருந்ததுடன் இப்போது தான் அது எனக்கு தெரிய வந்தது . நான் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வியாபரத்திற்காக இந்தியாவுக்குச் சென்று நாளை மறுநாள் திரும்புவேன். ஆகவே 200,000 ரூபாவை பின்வரும் கணக்கிற்கு உங்களால் விரைவில் மாற்ற முடியுமா? இந்த கணக்குக்கு உரிய நபர் எனக்கு பக்கத்தில் இருப்பதுடன் எனக்கான பணத்தைப் பெற்றுக் கொள்ளுவார்

பெயர் : கிளாடியக்ஸ் பெர்னாண்டஸ்
வங்கி : PQRS வங்கி
கணக்கு இல : 1111 2222 3333 4444

இது மிகவும் அவசரமானது . நான் திரும்பி வந்தவுடன் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன், இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன். நன்றி!

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால்,
உரிய நபரை அல்லது குடும்ப உறுப்பினரை அழைத்து இது உண்மையா என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்தவும்.