கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 8, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

ஒரு நாள் காலையில் திருமணமான பெண்ணான சீதா ஹிதாவதிக்கு தொலைபேசியில் அழைத்து, அழுகிறாள்

சீதா: மிஸ், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.
ஹிதாவதி: ஆம், நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
சீதா: எனது நிர்வாண காணொளிகள் ஆபாச தளங்களில் பரப்பப்பட்டு உள்ளதுடன், அவை பலராலும் பார்க்கப்பட்டு உள்ளன.
ஹிதாவதி: அது எப்படி நடந்தது என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
சீதா: நான் விரும்பவில்லை என்றாலும் என் கணவர் அவற்றைப் பதிவு செய்தார். ஆனால் அவர் என்னை இப்படி விற்றுவிடுவார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
ஹிதாவதி: அவர் அவற்றை அந்த தளங்களுக்கு விற்றுவிட்டார் என்று சொல்கிறீர்களா?
சீதா: ஆம்… என்னால் இப்போது சமூகத்தை எதிர்கொள்ள முடியாது….

அந்த பெண் அளித்த தகவல்களின்படி, ஹிதாவதி குறித்த காணொளிகள் வெளியிடப்பட்ட ஆபாசத் தளங்கள் குறித்து மேலும் ஆய்வு செய்தது. அத்துடன் புகாரளிக்கவும் அந்த காணொளிகளை அகற்றவும் அவளுக்கு வழிகாட்டியது. மேலும், 1938 (மகளிர் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்) இனால் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சட்ட நடைமுறைகளைத் தொடருமாறு ஹிதாவதி அவரிடம் கோரினார். கூடுதலாக, ஹிதாவதி அந்த நேரத்தில் மனதை வலுவாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தியது. நம்பமுடியாத இவ்வாறான சம்பவம் காரணமாக அப்பெண்ணின் மனம் வருந்தினால் 1926 (சிறப்பு மனநல உதவி எண்) அல்லது சுமித்ரயோவை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டது. எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியாக நம்பியதால் சீதா ஆரம்பத்தில் அழுது கொண்டிருந்த செய்கையை நிறுத்தினார். இறுதியாக அவர் பரிவு காட்டியதற்கு ஹிதாவதிக்கு நன்றி தெரிவித்தார், மேலும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார்.

 

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • நெருக்கமான காட்சிகளைப் பதிவுசெய்வது அல்லது உங்கள் நிர்வாணத்தை மற்றவர்கள் படங்கள் / காணொளி எடுக்க அனுமதிப்பது பரிந்துரைக்கப்படவில்லை. சில காரணங்களால் அவை வெளியே கசிந்தால், அவற்றை மீட்க ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும்.
  • இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் ஒரு உதவியற்ற பெண்ணாக இருந்தால் சட்ட ஆதரவுக்காக 1938 (பெண்கள் உதவி எண் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு) ஐ தொடர்பு கொள்ளவும்.
  • இந்த வகை சம்பவங்கள் காரணமாக நீங்கள் சோகமாக உணரும்போது 1926 (சிறப்பு மனநல உதவி எண்) அல்லது சுமித்ரயோவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • அத்தகைய படங்கள் / காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
  • நீங்கள் தோன்றும் உள்ளடக்கம் (படங்கள், வீடியோக்கள் போன்றவை…) உங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டால் புகாரளிக்கவும்; தேவைப்பட்டால், ஆதரவுக்காக ஹிதாவதியைத் தொடர்பு கொள்ளுங்கள்.