கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

ஷாலி பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்மணியாவார். அவர் கொழும்பில் தனது முதல் வேலையை ஆரம்பித்தார். ஒர் நாள் அவளது தொலைபேசியில் தெரியாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு கிடைத்தது.

அழைப்பாளர் 01: “ வணக்கம், ஷாலி”
ஷாலி: “ ஆம், நீங்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளலாமா?”
அழைப்பாளர் 01: “ நீங்கள் மிகவும் அழகாகவுள்ளீர்கள். நான் உங்களை எனது வருங்கால மணமகளாக கருதுவதற்கு விரும்புகிறேன், உங்களை பற்றி மேலும் கூறுங்கள்.
ஷாலி: “ என்ன?”
பீப்.பீப்.பீப் . (ஷாலி தொலைபேசியை வைத்தாள்.)
…………………………………………..

அழைப்பாளர் 20: “ ஹேவா, ஷாலியுடன் உரையாட முடியுமா?”
ஷாலி: “ஆம், நான் தான்”

அழைப்பாளர் 20: “ எனவே, நான் சுசந்த, நான் உங்களை விரும்புகிறேன் மேலும் நான் …………… பற்றி அறிய விரும்புகிறேன்.”
ஷாலி : “பொறுங்கள்.. பொறுங்கள், என்ன இது? நேற்றிலிருந்து விவாகம் கோருவதற்காக 20 இற்கும் மேற்பட்ட ஆண்களிடமிருந்து அழைப்புகள் கிடைத்துள்ளன. சற்று கூறுங்கள், உங்கள் எனது எண் எவ்வாறு கிடைத்தது ?”

அழைப்பாளர் 20: ஹாய் – ஷாலி”. ஏன் என்னிடம் சத்தமிடுகின்றீர்கள்? நீங்கள் திருமணமாவதற்கு விரும்பி உள்ளவர், அவ்வாறு தானே?”.
ஷாலி: “ ஏன் நான்? முடியாது.
அழைப்பாளர் 20: “ அவ்வாறெனில் ஏன் நீங்கள் உங்கள் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை @##$^^^.com வலைத்தளத்தில் வெளியிட்டீர்கள்?”
ஷாலி: மன்னியுங்கள்? எந்த வலைத்தளம்?
அழைப்பாளர் 20: “@##$^^^.com”
ஷாலி: “ மிஸ்டர், என்னை மன்னியுங்கள், நான் அதை செய்யவில்லை. நீங்கள் தவறாக அழைத்துள்ளீர்கள். தயவுசெய்து மீண்டும் எனக்கு அழைக்க வேண்டாம்”

அழைப்பு 20: “ ஹே பெண்ணே, நீ ஒரு பொய்காரி, ஏனையோருடன் விளையாடுவதற்கு இவ்வாறான விடயங்களை செய்யாதீர்கள்”
ஷாலி: “மன்னிக்கவும்”
பீப்.பீப்.பீப் . (ஷாலி தொலைபேசியை வைத்தாள்.)

இக்கலந்துரையாடலின் பின்னர் ஷாலி அதிருப்தி அடைந்தாள். அவளது மடிக்கணினியை திறந்து குறித்த இணையத்தளத்தைப் பரிசீலித்தாள். அவள் தனது பெயரை தேடினாள்.

நம்பமுடியவில்லை! அவளது பெயர், புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தென்பட்டன.

“கடவுளே நான் என்ன செய்வது?” “நான் எனது வாழ்க்கையை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளேன் – எனக்கு திருமணம் வேண்டாம்” இது பற்றி எனது அப்பா மற்றும் அம்மா அறிந்தால் என்ன செய்வது ?” யார் எனக்கு இதை செய்தது ?” தனக்கு தானே அவள் கூறிக்கொண்டாள்.

அவர் உதவியற்றவளாக உணர்ந்தாள். தற்போது தனது புகைப்படத்தையும் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் இந்த திருமண இணையத்தளத்தில் யாரோ பிரசுரித்துள்ளனர் என்பதில் உறுதியானாள்.

அலுவலகத்திலுள்ள தனது நல்ல நண்பிக்கு அழைப்பை ஏற்படுத்தி முழு விடயத்தையும் விவரித்தார். அவளால் அவளது கண்ணீரை நிறுத்த முடியவில்லை. ஷாலியின் நண்பி ஃபேஸ்புக் மூலமாக ஹித்தவத்தியை பற்றி கேள்வியுற்றிருக்கிறாள். ஹிவ்வத்தியை தொடர்பு கொள்ளுமாறு அவள் ஷாலியை கேட்டுக்கொண்டாள்.

இறுதியாக, ஷாலி ஹித்தவத்தியை தொடர்புக்கொண்டு உதவியை நாடினாள். ஹித்தவத்தி அவளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியது. குறிப்பிட்ட இணையத்தளம் டொமைனைக் கொண்டுள்ளதென்பதை ஷாலி அறிந்துக் கொண்டாள். எமது நிறுவனத்தினைக் கொண்டுள்ளதென்பதை ஷாலி பெற்றார். டொமைன் .COM ஆகவிருப்பின், குறித்த நபரை அடையாளம் கண்டு/ கண்டுபிடித்து அறியப்படுத்துவது கடினமாகும். அது எல். கே. (.lk) டொமைனாகவிருந்தால் ஒருவரை தொடர்பு கொள்வது இலகுவாகும்.

அதைத் தொடர்ந்து ஹித்தவத்தியின் மூலம் அவ் இணையத்தளத்தில் “ எம்மை தொடர்புக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளதிற்கு சென்று இவ்விடயத்தை அறியப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், ஹித்தவத்தி ஷாலிக்கு எவ்வாறு எழுதுவதென உதவி புரிந்தது. விசேடமாக தேவையான தகவல்கள் மற்றும் அவளது தகவல்களை உறுதிப்படுத்தாமல் பிரத்தியேகமாகப் பகிர்ந்தளிப்பதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அவரது விருப்பம் உள்ளடங்கலாக, தொழில்சார் முறையில் அதாவது உறுதியான முறையில் விசாரணையை அனுப்பி வைத்தல்.

அந்த இணையத்தளத்தில் தனது பெயரை இணைத்தது யாரென்பது இன்னும் மர்ம்மாகவுள்ளதுடன், மோசமான சூழ்நிலைமையிலிருந்து விடுபட உதவினார்கள்.

முன்னெச்சரிக்கை ஆலோசனைக:

  • உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபருக்கு இது போன்றதாக நடைபெறுமாயின், இது தொடர்பாக குழப்பம் மற்றும் பயம் கொள்ள வேண்டாம். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். பின்னர் ஹித்தவத்தியை தொடர்பு கொள்ளவும்.
  • இணையத்தளத்தில் நீங்கள் பகிர்ந்துள்ள உங்களது படங்கள், காணொளிகள் அல்லது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேறு விபரங்கள் பற்றி அறிக்கையிடுவதற்கும் அழிப்பதற்கும் ஹித்தவத்தியை தொடர்பு கொள்ளவும்
  • சைபர் – குற்றவியல் முறைப்பாடுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட சான்றுகள் (சரியான இணைப்புகள், திரை பிடிப்புகள், மற்றும் பல) CIDக்கு கையளிக்க முடியும் அல்லது பதிவுத் தபால் மூலம் “பணிப்பாளர், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கொழும்பு 01” இற்கு அனுப்பி வைக்க முடியும். அதற்கு மேலதிகமாக, அதே விடயத்தை மின்னஞ்சல் dir.ccid@police.gov.lk மூலம் சமர்ப்பிக்கவும் முடியும்.