கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 7, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

ஷனக என்பவர் பாதணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுடன் அதனை மிகவும் சிறந்த முறையிலும் மேற்கொண்டு வந்தார். அவர் தனது பாதணி வியாபாரத்திற்காக ‘ ஏபிசி ஷூஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்தார். அவரது பேஸ்புக் பக்கமானது சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்ததுடன் அதன் மூலம் அவர் ஒன்லைன் (Online) மூலமான வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தார்.

ஒரு நாள் ஷனகவுக்கு பேஸ்புக் பக்கம் ஒன்றிலிருந்து அறிவிப்பு (Notification) ஒன்று வந்திருந்தது. ‘வர்த்தகத்திற்கான பேஸ்புக் கொள்கைகள்’ என்றவாறாக அதன் பெயர் காணப்பட்டது. அது சமூக வலைத்தளத்தால் (Facebook) நடாத்தப்படும் அதிகாரபூர்வ பக்கமாகத் தோற்றமளித்தது. அதில் ஷனகவினுடைய வர்த்தகம் குறித்து ஒரு பதிவு (Post) இல் டக் (Tag )செய்யப்பட்டிருந்தது. அந்த Post ‘பேஸ்புக் மூலமான உங்கள் வர்த்தகம் சிறந்த முறையில் நடைபெறவில்லை என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உங்களது பேஸ்புக் பக்கத்தை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கும் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் உள்நுழைவு விவரங்களை எங்களிடம் வழங்கவும்’ என்றவாறாக அமைந்திருந்தது.

இது குறித்து சந்தேகமடைந்த ஷனக ஹிதவதியில் பணியாற்றும் தனது நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாகப் பார்வையிட்ட ஷனகவின் நண்பர் யாருக்கும் உள்நுழைவுத் தரவுகளை வழங்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார். மேலும் அவர் குறித்த பேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் அளித்தார். பின்னர் அது முகநூலில் இருந்து நீக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

  • எந்தவொரு சமூக ஊடகம் மற்றும் மின்னஞ்சல் கணக்கு என்பவற்றின் தரவுகளை எவரிடமும் வழங்க வேண்டாம்.
  • பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடகம் அல்லது மின்னஞ்சல் கணக்குகள் போன்றவற்றிற்கு இரு சாதன அங்கீகாரத்தை இயக்கவும்.
  • அனைத்து சமூக ஊடகம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுக்கு எப்பொழுதும் வலுவான கடவுச் சொற்களைப் பயன்படுத்தவும்.
  • உங்களால் பின் தொடரப்படும் பேஸ்புக் பக்கங்களிற்கான அங்கீகாரத்தை எப்பொழுதும் இருமுறை பரிசீலித்துக் கொள்வதுடன், அவற்றிற்குப் புறம்பாக பல போலியான பக்கங்கள் உள்ளமையையும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.