கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 20, 2023

பாகம் 04 வெளியீடு 09- 20வது செப்டம்பர் 2023

ஹிதவதி மாதாந்த அறிக்கை

ஒப்புதலற்ற பாலியல் காட்சிகளை முறையிடல்

 

“ஒப்புதலற்ற பாலியல் புகைப்படமாக்கல்” என்பது அதனில் தோன்றும் நபரின்/ களின் ஒப்புதலின்றி பகிரப்படும் பாலியல் ரீதியாக சித்தரிக்கப்பட்ட படங்களைக் குறிக்கின்றது. இது “ஆபாச பழிவாங்குதல்’ என்றும் அறியப்படுகின்றது. அந்தரங்கமாக வைக்கும் எண்ணத்துடன் உடலுறவின்போது எடுக்கப்பட்ட படங்கள், இரகசிய ஒளிப்பதிவுகள், இலத்திரனியல் கருவிகளிலிருந்து திருடப்பட்ட படங்கள் மற்றும் பாலியல் தாக்குதல்களின்போதான பதிவுகள் என்பவற்றை ஒப்புதலற்ற நெருக்கமான படங்கள் கொண்டிருக்கும்.

உங்களுக்கு தெரியுமா?

உலக மக்கள் தொகையில் 60 சதவீதமானோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தினசரி சராசரியாக 2 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
https://www.smartinsights.com

அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான ‘phishing-as-a-service’ (PaaS) எனும் இயங்குதளம் 43 நாடுகளில் 70,000 க்கும் மேற்பட்ட பயனார்களை சமரசம் செய்ய ஹேக்கிங் கருவிகளை விற்றுள்ளது.
https://www.interpol.int

தீங்கு விளைவிக்கும் மென்பொருள் ஏற்றியின் தாழ்வு: இந்த ஆண்டு இதுவரை நடந்த 80% தாக்குதல்களுக்கு பெரிய மூன்று மால்வார்ஸ் ஏற்றிகளே பொறுப்பு.
https://www.theregister.com

உலகளாவிய ரோமிங் மோசடி இழப்புகள் 2028 க்குள் $8 பில்லியனைத் தாண்டும்.
https://www.helpnetsecurity.com

 

வீட்டுக் கணினி பாதுகாப்பு குறிப்புகள்

• • உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அறிவூட்டவும்.
• பல காரணி அங்கீகாரத்தை (Multi-Factor Authentication MFA) இயக்குங்கள்.
• முக்கியமான தரவுகளை காப்புப் பிரதி எடுக்கவும்.
• எல்லா சாதனங்களிலும் தனியுரிமை அமைப்புகளை கட்டமைக்கவும்.
• சமூக ஊடகங்களை பயன்படுத்திடும் போது பாதுகாப்பாக இருக்கவும்.
• VPN ஐப் பயன்படுத்தவும்.
• உங்கள் திசைவியின் (router) பாதுகாப்பை பலப்படுத்தவும்.
• நவீன இயக்க முறைமையைப் பயன்படுத்தவும்.
• வைரஸ் தடுப்பு மென்பொருள் மூலம் பாதுகாக்கவும்.
• உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாக்கவும்.
• வீட்டு பொழுதுபோக்கு சாதனங்களை பாதுகாக்கவும்.
• வேலைத் தளங்களில் யன்படுத்தும் சாதனங்களை பாதுகாக்கவும்.
• உங்கள் பணி சாதனங்களைப் பாதுகாக்கவும்
• மின்தூண்டிலிடல் மோசடிகளைத் (phishing scams) தவிர்க்கவும்.
• இணைய வலையை பாதுக்காப்பாக உபயோகிக்கவும்.
• பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தவும்.
• சந்தேகத்திற்கிடமான USBகள் அல்லது வேறு வெளிப்புற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
• நிர்வாகி அல்லாத கணக்குகளை Windows மற்றும் Mac இல் பயன்படுத்தவும்.
• கையடக்க சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும்.
• ஆன்லைனில் பணம் செலுத்த பற்று அட்டைகளைப் (debit cards) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

Windows இற்கான Qlik சென்ஸ் எண்டர்பிரைஸினுடைய முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டன.
கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய CVE-2023-41265 மற்றும் CVE-2023-41266 என்பவை அங்கீகரிக்கப்படாத RCE ஐ அடைவதற்காக ஒன்றாக இணைக்கப்படக் கூடும்.
https://digital.nhs.uk

கருவிகளுக்கான பாதுகாப்பு புதுப்பிப்பை VMware வெளியிடுகிறது
VMware கருவிகளில் உள்ள பாதிப்பை நிவர்த்தி செய்ய VMware ஒரு பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இணையம் மூலமாக அச்சுறுத்தும் நபர் ஒருவர் இந்த பாதிப்பைப் பயன்படுத்தி முக்கியமான தகவலைப் பெற முடியும்
https://www.cisa.gov

மோசடி எச்சரிக்கை – இலங்கையர்களை குறிவைக்கும் இந்த மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவும்.
மோசடி செய்பவர்கள் இலங்கை தபால் திணைக்களம் போல் நடிக்கின்றனர்.
https://cert.gov.lk


சைபர் செய்திகள்

 

உலகில் முதன் முதலாக, உடல் சார் விளையாட்டில் AI மனிதர்களை வென்றுள்ளது.
ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் ட்ரோன் பந்தயத்தில் மூன்று உலக சாம்பியன்களைத் தோற்கடித்துள்ளது, இது ஒரு “புதிய மைல்கல்” என்று அதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
https://cybernews.com

110 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் இணையவெளியில் (cyberspace) இருந்து பெறப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, இணைய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 110 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
https://divaina.lk

15 வயது இளைஞன் ஆபாசமான உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக கைது செய்யப்பட்டான்.
குழந்தை நடிகை ஒருவரின் ஆபாச காணொளியை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக 15 வயது இளைஞன் ஒருவரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
https://www.adaderana.lk

ஆகஸ்ட் மாதத்தில் ChatGPT மொபைல் ஆப்ஸின் வருவாய் அதிகரிப்பு
சமீபத்திய மாதங்களில், ChatGPT மொபைல் ஆப்ஸின் பயன்பாடு தொழில்நுட்ப உலகை ஒரு புயலாக கைப்பற்றியுள்ளது, அத்துடன் வளர்ந்து வரும் கைபேசி இயங்குதளங்களின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவினை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் OpenAI இன் பயணத்தின் ஒரு வகை உருவமாகவும் உள்ளது
https://www.digitalinformationworld.com

சைபர் குற்றவாளிகள் புதிய தாக்குதல் முறைகளை உருவாக்க ஆராய்ச்சிப் போட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த போட்டிகள் முறையான பாதுகாப்பு மாநாடு ‘Call For Papers’ஐ பிரதிபலிக்கிறது அத்துடன் வெற்றியாளர்களுக்கு கணிசமான நிதி வெகுமதிகள் மற்றும் சக நண்பர்களிடமிருந்து அங்கீகாரம் மற்றும் சாத்தியமான வேலைகளையும் வழங்குகிறது.
https://www.helpnetsecurity.com

 

 

மாதத்தின் ரீல்

 

ஹிதாவதி facebook பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி வெளியிடப்படும் ரீலைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொண்டதை/உங்கள் அறிவிற்குச் சேர்த்ததைச் சுருக்கமாகக் கமெண்ட் செய்யுங்கள்!

தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களுக்கு MD குணசேன புத்தகக் கடை பரிசு வவுச்சர்கள் தலா ரூ.2,000/- வழங்கப்படும்!

இந்தப் போட்டிக்கு நிதியுதவி வழங்கிய LK டொமைன் ரெஜிஸ்ட்ரிக்கு மிக்க நன்றி!

உண்மைக்கதை

அதிர்ச்சிகரமான வேடிக்கை


சுரேஷ் வேலை தேடிக்கொண்டிருந்த போது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தது. பெரும்பாலும் வீட்டில் இருந்தவாறு கணனியில் விளையாடுவதும் மாலையில் நண்பர்களுடன் பின் முற்றத்தில் கிரிக்கெட் விளையாடுவதும் அவரது வழக்கமாக இருந்தது.

அடுத்து என்ன நடந்தது

ஹிதவதி செய்தி அறை

விழிப்புணர்வு திட்டங்கள்

கடந்த கால நிகழ்வுகள் :

“சைபர் மிரட்டல்” பற்றிய வெபினார் திட்டம்.

 

ஹிதவதி, 18 செப்டம்பர் 2023 அன்று காலை 10 மணிக்கு “சைபர் புல்லியிங்” என்ற வெபினார் அமர்வை ஏற்பாடு செய்தார், இது ஜூம் மற்றும் ஹிதவதி facebook பக்கம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது சிங்கள ஊடகங்கள் ஊடாக நடத்தப்பட்டதுடன் சுமார் 85 பேர் இணையத்தில் இணைந்துள்ளனர்.

வளவாளர்: திருமதி மேனகா பத்திரன – பிரதிப் பணிப்பாளர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு.

 

எதிர்கால வலையரங்கு அமர்வுகளில் பங்கேற்க மற்றும் இணைய பாதுகாப்பு பற்றி அறிய, கீழே உள்ள குறியீடுகளை கிளிக் செய்து எங்கள் Viber அல்லது WhatsApp குழுவில் சேரவும்:


திரைப்பட குறிப்பு

Hide and Seek – 1984

 

ஒரு இளம் கணினி ஆர்வலர் “Gregory P1” என்ற பெயரில் ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு திட்டத்தை உருவாக்குகிறார். அது அதன் உயிர்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக, மற்ற கணினிகளைத் தொடர்புகொண்டு மனிதர்களுக்கு எதிராக போராடத் தொடங்குகிறது. இது அணுமின் நிலையத்தின் தலைமைக் கணினியிலும் இணைகிறது.
https://youtu.be/xjQnucHby8Y?si=3WNMybvhBC_8dy1C

கேஜெட்

 

 

தன்னியக்க ஆளில்லா மேற்பரப்பு வாகனம்!


தன்னியக்க ஆளில்லா மேற்பரப்பு வாகனமானது கண்காணிப்பு, சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்தல் மற்றும் அபாயகரமான எண்ணையை அடையாளம் கண்டு, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வழிகாட்டும்.
https://www.hackster.io

பொருள் : நீங்கள் அதை முடித்தவுடன், இந்த தீங்கு விளைவிக்கும் மென்பொருளை அகற்ற முடியுமா?

https://cybersecurityventures.com/

நீங்கள் இப்போது எங்களை தொடர்பு கொள்ளலாம்
WhatsApp & Viber
+94 77 771 1199
(வணிக நேரங்களில் மட்டும்)

ஹிதவதி வாட்ஸ்அப் மற்றும் வைபர்
எண். +94 77 771 1199
(எங்கள் வணிக நேரங்கள் – வார நாட்களில் காலை 08.30 – மாலை 05.00 சனிக்கிழமைகளில் காலை 08.30 – மதியம் 12.30 வரை )