கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 21, 2024

பாகம் 05 வெளியீடு 03- 20வது மார்ச் 2024

ஹிதவதி மாதாந்த அறிக்கை

உங்கள் நெருக்கமான புகைப்படங்களை பற்றி கவலைப்படுகிறீர்களா?

உங்களால் அதனை முழுமையாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் முன்னேறிச் செல்வதற்கான நம்பிக்கை உள்ளது

StopNCII.org என்பது ரிவெஞ்ச் போர்ன் ஹெல்ப்லைனால் இயக்கப்படும் SWGfL இன் ஒரு பகுதியாக இருக்கும் தொழில்நுட்பத்தை அனைவரும் பாதுகாப்பாக, எந்தத் தீங்கும் இல்லாமல் பயன்படுத்துவதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள தொண்டு நிறுவனமாகும்

2000 ஆம் ஆண்டு முதல், SWGfL இணையத்தில் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்துள்ளது.

     உங்களுக்கு தெரியுமா?

  • 225,000 க்கும் மேற்பட்ட சமரசம் செய்யப்பட்ட ChatGPT ஆதாரங்கள் சட்ட விரோத இணைய சந்தைகளில் விற்பனைக்கு உள்ளன
    https://thehackernews.com
  • YouTube இன் iOS பயன்பாடானது உலகளாவிய ரீதியில் முக்கிய மைல்கல்லைத் தாண்டும் வகையில் அதனுடைய பயனர் செலவானது $8 பில்லியனை எட்டியுள்ளது
    https://www.digitalinformationworld.com
  • டெலிகிராம் இன் IPO வினுடைய பயனாளர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை நெருங்குகிறது
    https://www.theregister.com
  • ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தாக்குதலானது 27 ஆயிரம் நபர்களுடைய தரவுகளை வெளிப்படுத்தி உள்ளது
    https://cybernews.com


கவனமாகப் பகிரவும்: சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருத்தல்

  • உங்கள் சாதனத்தைப் பாதுகாக்கவும்
  • தரமான இணையதளங்களில் கொள்வனவு செய்யுங்கள்
  • கடினமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்
  • பரிவர்த்தனைகளின் போது, பொது Wi-Fi ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும்
  • Too-Good-to-Be-True வியாபாரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
  • தனியுரிமைக் கொள்கைகளைச் சரிபார்க்கவும்
  • வங்கி அறிக்கைகளை கண்காணிக்கவும்
  • பாதுகாப்பான கட்டண தெரிவுகளைப் பயன்படுத்தவும்
  • தனிப்பட்ட தகவல்களில் கவனமாக இருங்கள்
  • வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகளைத் கவனத்தில் கொள்ளுங்கள்
  • மீளப் பெரும் கொள்கைகளை புரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் கொள்முதல் பதிவுகளை வைத்திருங்கள்


சைபர் செய்திகள்

 

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட கூகுள் ஆதரவு செயற்கைக்கோளை SpaceX ஏவுகிறது
உலகின் அதிநவீன மீத்தேன்-கண்டறியும் செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தில் ஏவப்பட்டது – இது முன்னணி உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மீத்தேன் உமிழ்வைக் கண்காணிக்கும் நோக்கில் ஏவப்பட்டுள்ளது.
https://cybernews.com

பேலியகொடையில் இருந்து இலத்திரனியல் சிகரெட் விற்பனை மோசடி
பிள்ளைகளிடம் இவ்வாறான நாற்றம் வீசினால் உடனடியாக விசாரிக்குமாறு பெற்றோரிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இ-சிகரெட்டுகள் வெவ்வேறு வழிகளில் அதாவது சில சமயங்களில் கழுத்துப் பட்டியிலும் அல்லது ஸ்மார்ட் வாட்ச் வடிவிலும் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
https://www.dailynews.lk

பயனாளர்களின் இணைய உலாவல் தரவு மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்கிறது FTC விதிகள்
பயனாளர்களின் இணைய உலாவல் தரவு எவ்வளவு உணர்வுபூர்வமான விடயம் என்பதை FTC இறுதியாகத் முடிவெடுத்துள்ளது.
https://www.digitalinformationworld.com

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனமானது பிறர் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பினரின் தரவு மீறலை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கிறது
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் பல வணிகர்களால் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரின் தரவு மீறல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.
https://www.pymnts.com

சர்வதேச மகளிர் தினம்: AI சகாப்தத்தில் இணைய பாதுகாப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தல்
உண்மையில், பலதரப்பட்ட அனுபவங்கள் மற்றும் முன்னோக்குகளே அனைவருக்கும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான ரகசிய மூலப்பொருள் ஆகும்.
https://www.microsoft.com

மாதத்தின் ரீல்

ஹிதாவதி facebook பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி வெளியிடப்படும் ரீலைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொண்டதை/உங்கள் அறிவிற்குச் சேர்த்ததைச் சுருக்கமாகக் கமெண்ட் செய்யுங்கள்!

தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களுக்கு MD குணசேன புத்தகக் கடை பரிசு வவுச்சர்கள் தலா ரூ.2,000/- வழங்கப்படும்!

இந்தப் போட்டிக்கு நிதியுதவி வழங்கிய LK டொமைன் ரெஜிஸ்ட்ரிக்கு மிக்க நன்றி!

மலிவான டொலர் நோட்டுகள் $$$$$$$$

பியுமிக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தால் ஒன்லைன் மூலமாக வழங்கப்படும் பாடநெறியை பயில பணம் தேவைப்பட்டது. ஆனால் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக நாணய மாற்றத்தில் பிரச்சனை இருந்ததால் டொலர்களை பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே அவர் தனது நண்பர்களிடம் உதவி கேட்டு அவர் பேஸ்புக்கில் பதிவிட்டடார்.

அடுத்து நடக்க இருப்பதைப் பார்க்க..

ஹிதவதி செய்தி அறை

விழிப்புணர்வு திட்டங்கள்

கடந்த கால நிகழ்வுகள் :

TeensHub திட்டத்தைப் பற்றி ஆசிரியர்களுக்குக் கற்பித்தல்
Zoom தொழில்நுட்பம் மூலம்

மார்ச் 14, 2024 அன்று, இரவு 8 மணி முதல், ஹிதாவதி சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், ஜூம் தொழில்நுட்பம் மூலம் TeensHub திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது, இதில் பதுளை மற்றும் பசறை பிரதேச செயலகங்களின் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கல்வி பொருட்கள் பற்றிய விவாதம்
கொழும்பு பல்கலைக்கழகத்தில்

பிப்ரவரி 27, 2024 அன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தொழில்நுட்ப அடிப்படையிலான பாலின அடிப்படையிலான வன்முறை’ பட்டறையில் கல்வி முறை பற்றிய விளக்கத்தை ஹிதவதி செய்தார். இந்த நிகழ்ச்சியை Centre for Women’s Research (CENWOR) நடத்தியது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 40 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எதிர்கால வலையரங்கு அமர்வுகளில் பங்கேற்க மற்றும் இணைய பாதுகாப்பு பற்றி அறிய, கீழே உள்ள குறியீடுகளை கிளிக் செய்து எங்கள் Viber அல்லது WhatsApp குழுவில் சேரவும்:

     சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

VMware எச்சரிக்கை: EAP ஐ இப்போது நிறுவல் நீக்கம் செய்யவும் – முக்கியமான குறைபாடு காரணமாக செயலில் உள்ள கோப்பகம் ஆபத்தில் உள்ளது
முக்கியமான பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட அங்கீகார செருகுநிரலை [Enhanced Authentication Plugin (EAP)] நிறுவல் நீக்கம் செய்யுமாறு VMware பயனாளர்களை வலியுறுத்துகிறது.
https://thehackernews.com

ConnectWise இன் ScreenConnect இல் முக்கிய பாதிப்பு
CVE-2024-1709 இல் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய ConnectWise ஒரு பாதுகாப்பு ஆலோசனை மற்றும் இணைப்பை இடுகையிட்டுள்ளது.
https://www.cyber.gov.au

Ivanti கனெக்ட் செக்யூர் மற்றும் கொள்கை பாதுகாப்பு நுழைவாயில்களில் பல பாதிப்புகளை அச்சுறுத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர்
இணைய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் [Cybersecurity and Infrastructure Security Agency (CISA)] மற்றும் அதன் பங்குதாரர்கள் இந்த கூட்டு இணைய பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டு, இணைய அச்சுறுத்தல்காரர்கள் Ivanti கனெக்ட் செக்யூர் மற்றும் Ivanti கொள்கை பாதுகாப்பு நுழைவாயில்களில் முன்னர் அடையாளம் காணப்பட்ட பாதிப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறிவுறுத்துகிறது.
https://www.cisa.gov


திரைப்பட குறிப்பு

டெனெட் (2020)


எதிர்காலத்தில் கையாளக்கூடிய, ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய சில பொருட்கள் தவறான கைகளில் கிடைக்கப்பெரும் போது , கதாநாயகன் என்று அழைக்கப்படும் ஒரு CIA செயல்பாட்டாளர் அதாவது மத்திய புலனாய்வு முகாமை செயல்பாட்டாளர், உலகைக் காப்பாற்ற வேண்டும்.
https://www.youtube.com

கேஜெட்

AI-இயக்கப்படும் ஒரு பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஒரு பயன்பாடு


NVIDIA Jetson AGX Orin 64GB கிட்டில் விஷன் லாங்குவேஜ் மாடலால் இயக்கப்படும் ஒரு திருப்புமுனையாக விளங்கும் தொழில்நுட்பம்.
https://www.hackster.io


வேடிக்கைக்காக ஒரு தகவல்

வாயை மூடு, ஹரோல்ட். நான் இப்போது ஒரு குழுக்கல் சீட்டில் வெற்றி பெற்றேன் அதற்காக அவர்களுக்கு எனது PIN இலக்கம் தேவை படுகிறது.
https://cybersecurityventures.com/

நீங்கள் இப்போது எங்களை தொடர்பு கொள்ளலாம்
WhatsApp & Viber
+94 77 771 1199
(வணிக நேரங்களில் மட்டும்)

ஹிதவதி வாட்ஸ்அப் மற்றும் வைபர்
எண். +94 77 771 1199
(எங்கள் வணிக நேரங்கள் – வார நாட்களில் காலை 08.30 – மாலை 05.00 சனிக்கிழமைகளில் காலை 08.30 – மதியம் 12.30 வரை )