கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2024

 

பாதுகாப்பற்ற இணையத்தால் அழகான இளைஞர்களை களங்கப்படுத்த வேண்டாம்……..

எமது தலைக்கு மேலே உள்ள நிழல் எம் சொந்தக் கைகளால் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம், மேலும் நமது இணைய பாதுகாப்பை உறுதிசெய்வதில் பங்கு வகிப்போம். இல்லையெனில், உங்கள் இணையப் பாதுகாப்பின் முதல் எதிரியாக இருப்பதில் இருந்து உங்களைத் தடுக்க முடியாது:

ஒன்லைனில் பாதுகாப்பாக இருக்க உதவும் வழிகாட்டி இதோ:

1. இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்:

• இணைப்பின் டொமைன் பெயரைச் சரிபார்க்கவும்.
• இது நீங்கள் தேடும் இணைப்பு என்பதை உறுதிப்படுத்தவும்.
• இது ஒரு முறையான URL (இணைப்பு) என்பதைச் சரிபார்க்கவும்.

2. நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

3. வெவ்வேறு அமைப்புகள் மற்றும் கணக்குகளுக்கு தனிப்பட்ட கடவுச்சொற்களை உருவாக்கவும். யாரும் யூகிக்க முடியாத எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களின் கலவையுடன் அவற்றை வலுப்படுத்த வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பற்தூரிகை போல் கருதுங்கள்; மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

4. இரு காரணி அங்கீகாரம் அறிக, இது கடவுச்சொற்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும், முடிந்த போதெல்லாம் செயல்படுத்தப்பட வேண்டும்.

5. யாரோ ஒருவர் கேட்கிறார் என்பதற்காக உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. அவற்றைக் கொடுப்பது பொருத்தமானதா என்பதைத் தீர்மானித்த பிறகு, தேவைப்பட்டால் மட்டுமே அவற்றை வழங்க முடியும்.

6. பெற்றோர் அல்லது பாதுகாவலருக்குத் தெரியாமல் ஒன்லைன் நண்பரை நீங்கள் சந்திக்கக் கூடாது. ஆதரவு என்ற போர்வையின் கீழ் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

7. இணையத்தில் வரும் அனைத்து செய்திகளும் உண்மை என்று கருத முடியாது. ஏற்றுக்கொள்ளும் முன் ஒன்லைன் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.

8. உங்களுக்குத் தெரியாத ஒருவரின் USB அல்லது பிற தரவு சேமிப்பக சாதனங்களை உங்கள் கணினியுடன் இணைக்கவே கூடாது.

9. பொது வைஃபையைப் பயன்படுத்தும் போது எப்போதும் VPN ஐப் பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள்.

10. கணினியில் உள்ள அனைத்து தரவுகளும் தொடர்ந்து காப்புப் பிரதி எடுக்கப்பட வேண்டும்.

11. நீங்கள் எதையாவது பதிவிறக்க விரும்பினால், சரிபார்க்கப்பட்ட, நம்பகமான தளங்களை மட்டுமே நீங்கள் பார்வையிட வேண்டும். முகவரிப் பட்டியில் ‘https’ மற்றும் பூட்டு சின்னம் கொண்ட இணையதளம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. போலி அல்லது மோசடியான இணையதளங்களைக் கண்டறிவது எப்படி என்பதை அறிக.

12. பாதுகாப்பற்ற அல்லது பொது நெட்வொர்க்குகளில் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒன்லைன் வங்கி மற்றும் கொள்வனவில் ஈடுபட வேண்டாம். ஒன்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி என்பதை இங்கே கவனமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

13. நீங்கள் பரிசு/லாட்டரியை வென்றதாகக் கூறி அல்லது மில்லியன் கணக்கான பார்வையாளராக உங்களை வாழ்த்தி இணையதளம் அல்லது உங்கள் மொபைல் சேவை வழங்குநரிடமிருந்து நீங்கள் பெறும் செய்திகளைப் புறக்கணிக்கவும். உங்கள் தகவலை தவறாகப் பயன்படுத்தி உங்களிடமிருந்து எதையாவது பெறுவதே அவர்களின் முக்கிய குறிக்கோள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14. கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது பாடசாலையில் ஆசிரியரிடமோ சொல்லுங்கள். இழிவான அல்லது அவமதிக்கும் செய்திகளை அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.

15. இணையம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக உதவிக்கு ஹிதவதியைத் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.

Sources :
* https://www.wordfence.com/blog/2022/10/national-cyber-security-awareness-month-you-could-be-the-biggest-threat-to-your-wordpress-site/
* https://www.hithawathi.lk/ta/cyber-security-booklet-ta/