கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 1, 2021

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.

ஓர் குளிரான ஞாயிற்றுக்கிழமை காலையில், ரெஹான் படுக்கையில் இருந்தவாறு ஏனையவர்களின் பேஸ்புக் செய்திகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவனது பேஸ்புக் வாயிலாக இனந்தெரியாத மிகவும் கவர்ச்சியான பெண்ணொருவரிடமிருந்து வீடீயோ அழைப்பொன்றைப் பெற்றான்.

அவள் கையற்ற மேலாடையொன்றை அணிந்துக் கொண்டிருந்ததுடன் இனிமையான குரலில் கதைத்தாள். முதலில் அவள் தன்னை அமிர்தா என்றும் அயல்நாட்டில் உள்ளவரென்றும் அறிமுகப்படுத்தினாள். அவள் ரெஹானின் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த ஓவியங்கள் மீது ஆர்வமாகவுள்ளதாக கூறியதுடன் அது தொடர்பான மேலதிக தகவல்களை கவரும் விதமாக விசாரித்தாள்.

அமிர்தா: நீங்கள் அவற்றை விற்பதா?
ரெஹான்: நன்று, நான் அதனை பொழுதுபோக்காக அன்றி தொழிலாக செய்யவில்லை.
அமிர்தா: ஆ!.. நேரத்தை கடத்துவதற்கான சிறந்த வழி.. நீங்கள் எனக்கு
இலவசமாக ஒன்றை தர முடியுமா? (நாணத்துடன்)
ரெஹான்: ஹி ஹி, உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அமிர்தா: எனக்கு உங்களது உடையற்ற ஓவியமே பிடிக்கும்.. ஹாஹாஹா

இன்னும் அமிர்தா அவனுக்கு அன்னியமான ஒருவராக இருந்தாலும் கூட அவளது திறந்த நேரான அணுகுமுறையானது அவனை மிகவும் சௌகரியமாக உணரவைத்தது . எவ்வாறெனினும், கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது கவர்ச்சியான உரையாடலுடன் ஆடைகளை நீக்கத் தொடங்கியதுடன் அவனது நிர்வாணமான உடலை காட்டுமாறு வற்புறுத்தினாள். ரெஹானின் உணர்வுகள் தூண்டப்பட அவன் அப்பெண்ணிற்கு அடி பணியத்தான்.

.

குறித்த பிரியமான நிலைமை ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது. அவனுக்கு விரைவில் மீண்டும் அழைப்பை ஏற்படுத்துவதாக உறுதியளித்து அவள் அவ்வழைப்பை அவ்வாறே நிறுத்தாள். ரெஹான் சிறிது நேரம் அவ்வாறே காத்திருந்த வேளையில், ஒரு விநாடியில் அவனது கனவுகளை மழுங்கடிக்கும் வகையில் வட்ஸ்அப் வாயிலாக ஒரு வீடியோ கிளிப் செய்தியை அமிர்தாவிடமிருந்து எதிர்பாராவிதமாக பெற்றான்.

ரெஹான் பார்த்தது, அவளது மாயத்தோற்றத்தின் மூலம் ஒரு சில நிமிடங்களுக்கு முன் அவள் பதிவு செய்த அவனது சுய நிர்வாண வீடியோவையாகும். மேலும் அவனை ரூ.100,000 பணத்தை குறித்த கணக்கிலக்கத்திற்கு உடனடியாக வைப்பு செய்ய வேண்டும் இல்லையெனில் அவனது நண்பர்களுக்கு குறித்த வீடியோவை பகிர்வதாக அவளிடமிருந்து அச்சுறுத்தல் செய்தியொன்றை அவன் பெற்றான்.

ரெஹானுக்கு பயத்தினால் வியர்த்தது. அவனிடம் ஒரு சதமும் இல்லை. இந்த சங்கடத்துடன் அவனால் சமூகம், பணியிடம் , குடும்பத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்க முடியவில்லை. அவன் தடயமின்றி இருந்ததுடன் இணையத்தளத்தில் உதவியை தேடினான். பின்னர், அவன் ஹிதவத்தி இணையத்தளத்தை கண்டறிந்து அவர்களின் துரித எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினான். பெண் முகவரொருவர் அழைப்பை ஏற்றார். அவன் என்ன நடந்தது என கூறுவதற்கு கூச்சப்பட்டான். ஆனால் முகவரின் நடைமுறை கேள்விகளினால் அவனால் உண்மை கதையை மறைக்க முடியவில்லை. அம்முகவர் இதனை நிகழ்நிலை மூலமாக உரியவர்களது பலவீனத்தை அடையும் ‘ரொமான்ஸ் மோசடி ’ என விவரித்ததுடன் அவன் இதற்கு இரையாகியுள்ளதை குறிப்பிட்டார். ஹிதவத்தி குறித்த மோசடியாளர்களை முடக்கமாறு அவனிடம் கேட்டுக்கொண்டதுடன் குறித்த ஊழல் தொடர்பாக முகப்புத்தகம்/வட்ஸ்அப் இற்கு முறைபாடு செய்வதற்கு தொடர்புடைய லிங்க் மற்றும் ஸ்கிரீன் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் முறைபாடு செய்வதற்கு வேண்டிய அனைத்தையும் அவன் வழங்கியதுடன் இரண்டு நாட்களுக்கு பிறகு ஹித்தவத்தியிடமிருந்து தேவையான நடவடிக்கை முகப்புத்தகம்/வட்ஸ்அப் எடுக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப்பெற்றது. ஹித்தவத்தியின் மறுமொழியின் மூலம் அவன் திருப்தியளித்ததுடன் இணையவெளியில் இனந்தெரியாத நபர்களுடன் கையாளும் போது உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

  • நிகழ்நிலையில் நாம் யாருடன் அளவளாடுகின்றோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் எந்நோக்கத்தில் எம்முடன் அளவளாடுகின்றனர் என்பது உமக்கு தெரியாது. (நேரம் கடத்தல், ஊழல், மேலும் பல.)
  • இணையத்தளத்தில் நிர்வாண உள்ளடக்கங்களை பகிர்வது அல்லது நிகழ்நிலையில் மிக நெருங்கிய பாத்திரங்களுடன் விளையாடுவது என்பன பரிந்துரைக்கப்படவில்லை. அவர்கள் ஏதேனுமொரு காரணத்திற்காக அவற்றை வெளியிட்டால் அவற்றை சரிசெய்வதற்கு நீண்ட செய்முறை எடுக்கும்.
  • இணையவெளியில் மோசடி செய்யப்பட்டால் அச்சமடைய அல்லது குற்றமாக உணர வேண்டியதில்லை. ஏனெனில் மோசடியாளர்களின் தொழில் பல்வேறு சூழ்ச்சிகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாகும். அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம்.
  • பேஸ்புக்/வட்ஸ்அப் நிறுவன நெறிமுறைகளை மீறுகின்ற ஸ்பேம்/ஊழல் என்பவற்றின் கீழ் இவ்வகையான மோசடி செயற்பாடுகளை முறைப்பாடு செய்யவும். உங்களது அனுமதியின்றி நீங்கள் தோன்றக்கூடிய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தால் அதனை முறைப்பாடு செய்யவும். தேவை ஏற்படின் உதவிக்கு ஹித்தவத்தியைத் தொடர்புக் கொள்ளவும்.
  • ஹித்தவத்திக்கு முறைபாடு செய்யும் போது சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் வழங்குவது அதற்கான உரிய தீர்வை எடுப்பதற்கு மிகவும் இலவானதாக இருக்கும். உங்கள் அனுமதியின்றி உங்களது சுயத்தகவல்கள் ஏனையவர்களுடன் பகிரப்படமாட்டாது.
  • இணையவெளி குற்றங்களுடன் தொடர்புடைய முறைபாடுகள் சாட்சிகளுடன் சீ.ஐ.டீ க்கு தெளிவாக கையளிக்கப்படும் அல்லது ‘பணிப்பாளர், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும். மேலதிகமாக, நீங்கள் குறித்த விடயம் தொடர்பில் dir.cid@police.lk என்ற ஊடாக மின்னஞ்சல் செய்யவும் முடியும்.