கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 30, 2023

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

சாருகி தனது உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்து முடிவுகளுக்காக காத்திருந்தாள். அவள் பாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பான மாணவியாக மற்றுமல்லாது அவளது பாடசாலையில் பல சங்கங்களில் உறுப்பினராகவும் இருந்தாள். அதனால் அவள் உயர்தர பரீட்சையை முடித்த பின்னரும் அதிக நேரத்தைத் தனது பாடசாலையிலேயே கழித்தாள். அவள் தனது பாடசாலையின் பல்வேறு சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களுக்கு உதவும் நோக்கில் அடிக்கடி பாடசாலைக்கு வந்தாள்.
சாருகிக்கு காதலன் ஒருவன் இருந்தான், அவளது பெற்றோர் அவனைப் பற்றி அறிந்திருந்தனர், அவனுடைய பெற்றோரும் சாருகியைப் பற்றி அறிந்திருந்தனர். இரு குடும்பத்தாரும் அவர்களை ஆசிர்வதித்தனர்.
சாருகியும் அவளது காதலனும் ஒருவரையொருவர் மிகவும் நம்பியபடி தீவிர உறவு வைத்திருந்தனர். ஒரு சாதாரண ஜோடி செய்வது போன்று தங்களது படங்களைப் பகிர்ந்துள்ளனர். அதே போல் அந்தரங்க புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வது பற்றியும் அவர்கள் இருமுறை சிந்திக்கவில்லை.
ஒரு நாள் காலையில், பாடசாலையின் ஆங்கில தினம் என்பதால் பாடசாலைக்கு விரைந்தாள் சாருகி, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராகப் பாடசாலையில் அவளுக்கு ஒரு நல்ல இடம் கிடைத்திருந்தது. எனவே பாடசாலை முடிந்த பிறகும், பாடசாலை நிகழ்வுகளில் அவள் எப்போதும் உதவினாள்.
நிகழ்ச்சி நடைபெறும் வேளையில் அவள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தபோது, தன் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது, அவளுடைய பாடசாலையைச் சேர்ந்த சில சிறு மாணவர்கள் அவளிடம் வந்து அவளது தொலைபேசியைக் கேட்டனர்.

சிறு மாணவர்கள் குழாம்: அக்கா, நிகழ்ச்சியின் புகைப்படங்களை எடுக்க உங்கள் தொலைபேசியை எங்களிடம் தர முடியுமா

சாருகியொ இருமுறை யோசிக்கவில்லை

சாருகி:  ச்சயமாக!!! தரலாமே… இதோ எடுத்துக் கொள்ளுங்கள், இது தான் அதன் கடவுச்சொல் மாதிரி ******
சிறு மாணவர்கள் குழாம்: நன்றி.. அக்கா விரைவில் திருப்பி தருகிறோம்.

சாருகி ஓயாமல் நிகழ்வின் வேலைகளின் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால். அவள் தொலைபேசியை கிட்டத்தட்ட மறந்துவிட்டாள். இரண்டு மணி நேரம் கழித்து, குறித்த சிறுவர்கள் அவளுக்கு தொலைபேசியைத் திருப்பி கொடுத்துவிட்டு நன்றி தெரிவித்தனர்.

சிறு மாணவர்கள் குழாம்: அக்கா,புகைப்படங்களை செனுலுக்கு அனுப்ப மறக்க வேண்டாம். அவனுடைய தொலைபேசி இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கிறோம். அவனுடைய தொலைபேசியிலிருந்து படங்களை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்
சாருகி: நிச்சயமாக, நான் அனுப்புகிறேன்

சாருகிக்கு அப்போது படங்களை அனுப்ப நேரம் கிடைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு அம்மாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் அந்த சிறுவர்களுக்குப் படங்களை அனுப்ப மறந்துவிட்டதை அவள் உணர்ந்தாள்.
தன் தொலைப்பேசியை எடுத்த படி செனுலின் இலக்கத்தைத் தேடினாள். வழக்கத்துக்கு மாறாக ஏதோ நடந்துள்ளது என்பதை அவளால் கவனிக்கக்கூடியதாக இருந்தது.
ஐயோ கடவுளே!!!!!!
அவளது அந்தரங்கப் புகைப்படங்கள் அவளது அனைத்து வாட்ஸ்அப் தொடர்புகளுடனும், சில மோசமான செய்திகளுடன் அவளுக்குத் தெரியாத தொடர்பு இலக்கங்களுடனும் பகிரப்பட்டிருந்தன.
அவள் ஆழ்ந்த சிக்கலில் இருந்தாள். சாருகி பயந்து அழுதாள். அவள் உடனே தன்னை மிகவும் புரிந்து கொண்ட காதலனை அழைத்தாள். அவரன் அவளை சமாதானப்படுத்தி, விரைவில் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க உதவுவதாக உறுதியளித்தார்.

சாருகியின் காதலன்:  சாரு, என்ன நடந்தது என்பதைப் பற்றி யோசிக்காமல்… என்ன செய்யலாம் என்று பார்ப்போம். கவலைப்பட வேண்டாம், ஏதுவாக இருந்தாலும் நான் உனக்காக இருக்கிறேன். இந்தக் குழப்பத்தை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பற்றி பார்க்க எனக்கு சிறிது நேரம் கொடு.

சாருகிக்கு தன் காதலன் மீது நம்பிக்கை இருந்ததால் சற்று நிம்மதி அடைந்தாள்.
சாருகியின் காதலன்  இணையத்தில் இதற்கான தீர்வுகள் எதுவும் இருக்கிறதா என தேடினான். அப்போது அவன் ஹிதவதியைப் பற்றி தெரிந்து கொண்டான் ,மேலும் சாருகியிடம்  இதை பற்றி கூறினான். அவர்களை தொடர்பு கொண்டு பார்க்கும் படி சாருகியை கேட்டுக்கொண்டான். சாருகி ஏமாற்றத்துடன் ஹிதவதியை அழைத்து அவளுக்கு நடந்ததை விளக்கினாள். முதலில் ஹிதவதி அவளை அமைதியாக இருக்கும் படி கூறியது. பின்னர் ஹிதவதி, சாருகிக்கு அவதூறான செய்திகளை அனுப்பும் அனைத்து வாட்ஸ்அப் கணக்குகளையும் புகாரளிக்க வழிகாட்டியது. மேலும், இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க சாருகி  தயாராக இருந்தால், விமென் இன் நீட் (WIN) இன் தொடர்பு விபரங்களை  ஹிதவதி வழங்கியது . சட்டப்பூர்வ ஆதரவை வழங்க தயாராக  இருக்கும் வழக்கறிஞர்கள் இருப்பதால் தன்னம்பிக்கையோடு WIN உடன் பேசுமாறு சாருகி கேட்டுக் கொள்ளப்பட்டாள்.  மேலும், WIN அல்லது சுமித்ரயோவிடம் இருந்து இலவச ஆலோசனை சேவைகளைப் பெற்று தன்னை வலிமையாக்கிக்கொள்ளலாம் என்று ஹிதவதி அவளுக்குத் தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

  • உங்கள் சாதனங்களை (உ.தா; கையடக்க தொலைபேசி, மடிக்கணினி, முதலியன) யாருடனும் பகிர வேண்டாம், மேலும் உங்கள் நிகழ்நிலை கணக்குகளின் உள்நுழைவுச் சான்றுகளை யாருடனும் பகிர வேண்டாம்.
  • இலவச சட்ட மற்றும் ஆலோசனைகளை வழங்கி பெண்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான விமன் இன் நீட் (WIN) ஐ அணுகவும்.
  • செயலியூடாகவே தொடர்புகொள்வதன் மூலம் வட்ஸ்அப்பிடம்  சிக்கல்களைப் புகாரளிக்கவும்
  • இது போன்ற சம்பவங்களால் நீங்கள் மனம் தளரும்போது சுமித்ரயோவைத் தொடர்பு கொள்ளவும்.