கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 15, 2021

பேஸ்புக்கில் மற்றொரு தவறான பயன்பாடு – எச்சரிக்கையாக இருங்கள்…
அடுத்த இரையாக நீங்கள் இருக்கலாம் !!

ஹிதவதியால் முன்பு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி ,பேஸ்புக்கின் தவறான பயன்பாட்டிற்கான மற்றொரு நிஜ வாழ்க்கை உதாரணம் இங்கே தரப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் படங்களையும் தகவல்களையும் பயன்படுத்தி ஒருவர் பேஸ்புக் கணக்கை பராமரிக்கும் விடயம் தொடர்பில் 2019 ஏப்ரல் 07, லங்காதீப செய்தித்தாளின் ‘சண்டெல்லா’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சுருக்கமே இங்கே தரப்படுகிறது .

நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த ஆபத்து எவருக்கும் இருக்கலாம் என்பதை ஹிதவதி உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறது . உங்கள் குணம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையை அவமதிக்க அல்லது உங்கள் தொழிலில் கரும்புள்ளியை ஏற்படுத்த யாராவது இதை ஒரு வடிவமாக பயன்படுத்தலாம்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இங்கு தேடுங்கள்.
எச்சரிக்கையாக இருக்க இங்கிருந்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளவும்.

மொழிபெயர்ப்பு
உண்மையில் நான் இதுவரை பேஸ்புக்கில் இல்லை. எதிர்காலத்தில் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இருப்பினும், யாரோ ஒருவர் எனது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தை எனது சகல படங்களுடனும் பராமரிக்கிறார். அது போலியானது. அந்த நபருக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்று நினைக்கிறேன். நான் இன்ஸ்டகிராமில் மட்டுமே இருக்கிறேன், அங்கு நான் தினமும் எனது புகைப்படங்களை இடுகிறேன். அந்த நபர் அந்த புகைப்படங்களை எடுத்து மேற்குறிப்பிட்ட பக்கத்தை பராமரிக்கிறார். எனவே, எனது பெயருக்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கம் போலியானது என்றும் தயவுசெய்து ஏமாற்ற வேண்டாம் என்றும் எனது நண்பர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
(ருவங்கி ரத்நாயக்க)

மேலதிக தகவலுக்கு
www.hithawathi.lk
help@hithawathi.lk
011-421 6062